`ஆறால் மீன்' உணவு; படகுப் பயணம்; தமிழ்நாட்டின் குட்டி கேரளாவுக்கு ஒரு ஜாலி ட்ரிப்|Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

தமிழ்நாட்டின் குட்டி கேரளா என மக்களால் அன்போடு அழைக்கப்படும் பகுதி சேலம் மாவட்டத்திலுள்ள பூலாம்பட்டி. படகுப் பயணம், சுவையான மீன் உணவு என ஜாலியாக பட்ஜெட்டுக்குள் சென்று வர சிறந்த இடம்.

ஈரோட்டில் இருந்து பூலாம்பட்டி செல்வதற்கு 3 வழிகள் இருக்கின்றன. அதில் சங்ககிரி வழியாகச் செல்வதும் ஒன்று . பை-பாஸில் மண்பாண்ட தாபாக்கள் இங்கு ஃபேமஸ்.

பூலாம்பட்டி போகும் வழியில் ஒரு பேரேஜ் வருகிறது. Barrage என்றால் ஓர் அணைக்கட்டுக்கு இடையில் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் பாலம். Barrage-ல் மட்டும் கிடைக்கும் ஆறால் மீன் பயங்கர சுவை.

வழியில் முன்னாள் முதல்வரின் வீடு தென்படும். அதை தாண்டிப் போனால்… மேட்டூர் போகும் வழியில் இடதுபுறம் திரும்ப வேண்டும். வழியெல்லாம் பச்சை பசேல் தோட்டங்கள். அத்தி குறைந்த விலைக்கு கிடைக்கும் சீசனில் மட்டும்.

‘குட்டி கேரளா’ என எழுதப்பட்டிருக்கும் கடை போர்டுகள் தென்பட்டால் அதுதான் பூலாம்பட்டி வந்து விட்டதற்கான அடையாளம்.

Boat பயணம், நதிக்கரை குளியல், மீன் சாப்பாடு என பொழுதுபோக்கலாம். இது ஒரு one-day ஸ்பாட்தான். மேட்டூர் – பண்ணவாடி என்று இதை இரண்டு நாட்கள் பயணமாகக்கூடத் திட்டமிடலாம்.

இங்கே பிரமாண்டமாக ஓடும் காவிரி ஆற்றின் மீது படகு சவாரி நல்ல அனுபவமாக இருக்கும். மக்களோடு படகில் செல்வதற்கு கட்டணம் 10 ரூபாய்தான். தனி படகு என்றால் 500 ரூபாய் வரும்.

மீன் வறுவல், ஆறால் மீன் உணவு, அத்திப்பழம் பர்ச்சேஸ், ஆற்றுக் குளியல், படகுப் பயணம்… என்று சேலம், ஈரோடுவாசிகளுக்கு செமையான வீக் எண்ட் ஸ்பாட் பூலாம்பட்டி.

ஈரெட்டி அருவி, மேட்டூர் அணை, அந்தியூர் குட்டி கொடிவேரி, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், மூக்கனேரி ஏரி, குறும்பப்பட்டி உயிரியல் பூங்கா, பண்ணவாடி என ஒரு பக்கெட் லிஸ்டோடு புறப்படலாம்.

ஆறு, போட்டிங், மீன் உணவு, ஜாலி ரைட் என சுற்றி விட்டு வரலாம். இந்த சம்மர் சீசனுக்கு ஏற்ற பட்ஜெட் சுற்றுலா தளம்.