``உங்களால் என் கதைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை...'' - சதத் ஹசன் மண்ட்டோ Quotes| Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

இந்திய படைப்பியல் வரலாற்றிலும், இந்தியப் பிரிவினை வரலாற்றிலும் தவிர்க்க முடியாத பெயர் மண்ட்டோ. இன்று அவரது பிறந்தநாள்.

சுதந்திர வரலாற்றின் கருப்புப் பக்கங்கள் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் நிரம்பியவை. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மண்ட்டோ பிரிவினையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பதிவுசெய்தார்.

சமூகம் குறித்த மண்ட்டோவின் மேற்கோள் இது. சமூகத்தை அவர் எவ்வாறு பார்த்தார் என்பதற்கான உதாரணம்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மண்ட்டோவை மிகவும் பாதித்தது. அவர் இஸ்லாமியர் என்பதாலேயே 'நீ மட்டும் என் நண்பனாக இல்லாவிட்டால், உன்னையும் நான் கொன்றிருப்பேன்' என தன்னுடைய நண்பன் சொன்னது அவரை உலுக்கியது.

சமூகத்தால் கவனிக்கப்படாத பாலியல் தொழிலாளர்களின் வாழ்வை எந்தப் பூச்சுகளுமின்றி கதைகளாக்கினார்.

'நான் உண்மையாகவே கதைகளை எழுதவில்லை. அவை தன்னைத்தானே எழுதிக் கொள்கின்றன' என்றார் மண்ட்டோ.

எளிய மனிதர்களை அவர்களின் நியாயங்களை கதைகளாக பிரதியெடுத்தவர் மண்ட்டோ.

கலகக்குரல் ஒலிக்கும் வரை மண்ட்டோ பெயரும் காற்றில் நிறைந்திருக்கும்.