தனது எடையைவிட 1,141 மடங்கு எடையை இழுத்துச் செல்லும் சாண வண்டு; சுவாரஸ்ய தகவல்கள்! I Visual Story

இ.நிவேதா

7,000 இனங்களுக்கு மேல் உள்ள சாண வண்டுகள் (Dung Beetles), சாணங்களை மட்டும் உண்டு வாழும். கிட்டத்தட்ட 1 மி.மீ அளவில் இருந்து 3 செ.மீ அளவு வரை வளரும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும்.

சாண வண்டு | pixabay

இவை கூட்டமாகவே வாழும். சாணம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சரியாக மோப்பம் பிடித்துக் கூட்டமாகச் சென்று சாணத்தைத் தின்று சிதைத்துவிடும்.

சாண வண்டு | pixabay

சாண வண்டுகளில் நான்கு வகை உண்டு.

உருட்டுவோர் (Rollers): இவ்வண்டுகள் சாணங்களைக் கண்டவுடன், அவற்றை உருட்டி தன்னுடைய இருப்பிடத்துக்கு எடுத்துச் செல்லும்.

சாண வண்டு | pixabay

குடைவோர் (Tunnellers): இவை சாணத்தைக் கண்டுபிடித்தால், சுரங்கப்பாதையைத் தோண்டி சாணத்தைச் சேமித்து வைக்கிறது.

Dung beetle | pixabay

வாசிகள் (Dwellers): உருட்டும் குடையும் வேலையை இவ்வகை வண்டுகள் விரும்புவதில்லை.

Dung beetle | pixabay

திருடர்கள் (Stealers): இவை சோம்பேறி வண்டுகள், சாணங்களை உருட்டி வரும் வண்டுகளிடம் இருந்து சாண உருண்டைகளைத் திருடுவதோடு சண்டையும் போடும்.

Dung beetle | pixabay

3.3 பவுண்டு யானை சாணம், இரண்டரை மணி நேரத்தில்16,000 வண்டுகளால் உண்ணப்பட்டுச் சிதைக்கப்படும்.

சாணக்குவியல் | pixabay

ஒரு சாண வண்டினால், ஒரே இரவில் தன்னைவிட 250 மடங்கு கடினமான சாணத்தைத் சிதைக்க முடியும். சாண வண்டுகளின் சராசரி ஆயுட்காலம் 3 - 5 ஆண்டுகள்.

சாண வண்டு | pixabay

தாங்கள் என்ன உண்ண வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும். இலைகளை உண்ணும் விலங்குகளின் கழிவுகளை அதிகமாக உட்கொள்ளும். மாடு மற்றும் யானையின் சாணங்களே இவற்றுக்குப் பிடித்தமான உணவு.

கால்நடை | pixabay

Onthophagus Taurus என்ற வகை வண்டு, தனது உடல் எடையை விடக் கிட்டத்தட்ட 1,141 மடங்கு எடையை இழுத்துச் செல்லும்.

சாண வண்டு | pixabay