உயிரைப் பறித்த மின்வேலி... கோவையில் பலியான இன்னொரு பேருயிர்!

தி.விஜய்

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம் முள்ளங்காடு சுற்றுக்கு உட்பட்ட குளத்தேரி பகுதியில் துரை (எ) ஆறுச்சாமி என்பவரது தோட்டத்தில் 22 வயது, மதிக்கத்தக்க ஆண் யானை நெல் வயலைச் சுற்றி கட்டப்பட்டிருந்த மின்வேலியின் மீது விழுந்து உயிரிழப்பு.

இறந்த யானையை வனத்துறை அதிகாரிகள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆய்வு செய்தனர்.

சின்ன வெங்காயம் தோட்டத்திலிருந்து வயலை நோக்கி வந்ததில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது

யானை இறப்பிற்கு காரணமான மின் வேலி

மனிதர்களின் செயலால் இளம் வயதிலேயே பரிதாபமாக உயிரழந்த யானை!

யானையின் இறப்பை வருத்தத்துடன் காணும் ஊர் மக்கள்

யானை எந்த வழியாக வந்தது என்று கூறும் ஊர்க்காரர்

மின்சாரத்தால் உயிரிழந்த பேருயிர்!

கோவையில் 2021-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே யானை இறந்தது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.