பல் இல்லை, ஆனால் நோய் பரப்பும் அசகாய சூரர்கள்: கொசுக்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்! #VisualStory

இ.நிவேதா

பற்களே இல்லாத ஓர் உயிரினம் மனிதனை கடித்து படுக்கையில் தள்ள முடியுமா? கொசுவால் முடியும். உருவில் சிறியவையாக இருந்தாலும் நோய்களைப் பரப்புவதில் அசுர வேகம் கொண்டவை.

கொசுக்களில் 3,000-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இவையனைத்துக்கும் `ரூட்டு தலை' ஆக செயல்படுவது, மலேரியாவை உருவாக்கும் அனாஃபிலஸ், டெங்குவை உருவாக்கும் ஏடிஸ், யானைக்கால், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் க்யூலக்ஸ்.

ஆண் கொசுக்கள் 10 நாள்களுக்கும் குறைவாக உயிர்வாழும், பெண் கொசுக்கள் 6 - 8 வாரம் வரை உயிர்வாழும்.

கொசுக்கள் வெகுதூரம் பயணிப்பதில்லை; பறப்பதை 3 மைல்களுக்குள்ளாக நிறுத்திக்கொள்கின்றன.

பெண்கொசுக்கள் தன் வாழ்நாளில் மூன்று முறை முட்டையிடும்; ஒவ்வொரு முறையும் 300 முட்டையிடும். இவ்வேகத்தில் இனப்பெருக்கம் செய்தால், ஆறே தலைமுறையில் ஒரு கொசுவின் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டும்.

ஆண்கொசுக்கள் தாவரச்சாற்றைக் குடித்துக்கொண்டு காலம் கழிக்கும். பெண் கொசுக்கள் முட்டைகளை உருவாக்க தேவைப்படும் புரதத்தைப் பெறுவதற்காகவே ரத்தம் குடிக்கின்றன.

கொசுக்களால் அதன் எடையைவிட 3 மடங்கு ரத்தம் உறிய முடியும்.

கொசுக்கள் மனிதனின் வெப்பத்தை உணர்ந்து யாரைக் கடிக்கலாம் எனத் தீர்மானிக்கிறது. அடர் நிற துணிகள் கொசுவை ஈர்க்கும். ஏனெனில், இவ்வகை துணிகள் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ளும்.

கொசுக்களால் எய்ட்ஸ் நோயைப் பரப்ப இயலாது. உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5-வது இடத்தில் உள்ளது.

எய்ட்ஸ்

`அனாஃபிலஸ்’ என்ற பெண் கொசுக்கள் மூலமாக மலேரியா பரவுவதை 1897-ல் மருத்துவர் ரெனால்டு ரோஸ் கண்டறிந்தார். இந்த நாளின் நினைவாக, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20-ம் தேதி உலக கொசு தினம் கொண்டாடப்படுகிறது.

மலேரியா

கொசு ஒழிப்பு: கொசுப்புழுக்களால் நீரில் மூச்சு விட முடியாது. அவை மூச்சு விட நீரின் மேல்மட்டத்துக்கு வரும். நீரின் மீது மண்ணெண்ணெயைத் தெளித்தால் அவை அழிந்துவிடும்.

டயர்கள், தகரங்கள், பிளாஸ்டிக் பொருள்களில் நீர் தேங்காதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்கலாம்.

வீட்டைச் சுற்றி துளசி, திருநீற்று செடியை வளர்க்க, கொசு வருவது குறையும். கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள் சல்பர். கற்பூரம் சல்பரினால் ஆனது.

முள்துளசி, கல் துளசி

மண்ணெண்ணெய் மற்றும் கற்பூரம் இந்த இரண்டுமே மிகச்சிறந்த கொசுக்கொல்லிகள். பூண்டு வாசனையும் கொசுவுக்கு ஆகாது.

மண்ணெண்ணெய்