தெரு நாய்கள் எப்போது தாக்கும்? செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை! I Visual Story

இ.நிவேதா

தெருநாய்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெருநாய் குறித்தும், அவை தாக்கும்பட்சத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே...

pixabay

நாய், ஒரு பொருள் வேகமாக ஓடும்போது துரத்திப்பிடிக்கும் தன்மை உடையது. கோழியோ, ஆடோ ஓடும்போது, பைக், காரில் ஒருவர் வேகமாகச் செல்லும்போது துரத்திப் பிடிக்கும். இதற்கு Prey drive என்று பெயர். ஒரு நாய் ஒருவரை துரத்திக் கடிக்கும்போது கூட்டத்தில் இருக்கும் நாய்களும் ஓடிப்போய் காரணமின்றிக் கடிக்கும்.

ரேபிஸ் நோயால் தாக்கப்பட்ட நாய்களின் மூளை பாதிக்கப்படுதுவதால் கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் கடிக்கும் தன்மையோடு இருக்கும்.

தெரு நாய்கள் அறிமுகம் இல்லாதவர்களை நம்பாது. அறிமுகமில்லாதவர்களையே (Strangers) கடிக்கும்.

நாய் | எல்.ராஜேந்திரன்

காயம்பட்ட அல்லது தாக்கப்பட்ட நாய் வலியில் இருக்கும்போது அந்த நாயை நாம் தொடும்போதோ, சீண்டும்போதோ வலியின் அடிப்படையில் நம்மைக் கடிக்க வாய்ப்புள்ளது.

நாய் | சித்தரிப்புப் படம்

இனப்பெருக்கக் காலத்தில் நிறைய நாய்கள் ஒரு பெண் நாய்க்காக சண்டையிடும். அச்சமயத்தில் ஒவ்வொரு நாயும் முரட்டுத் தனத்தோடு இருக்கும். அந்த நேரத்தில் நாய்களை அணுகும்போது கடிக்கும்.

pixabay

பெண் நாய்களின் மகப்பேறு காலத்தில் அவற்றின் குட்டிகளை தொடும்போதும், தூக்கும்போதும், தன் குட்டிகளை ஏதாவது செய்துவிடுவார்கள் என்ற குட்டியின் பாதுகாப்பைக் கருதி கடிக்க வாய்ப்புள்ளது.

தெரு நாய்களுக்கு பெரும்பாலும் உணவு கிடைக்காது. அரிதாகவே உணவு கிடைக்கும். தனது சாப்பாட்டை எடுத்துக்கொள்வார்கள் அல்லது திருடிவிடுவார்கள் என்ற பயத்தால் கடிக்க வாய்ப்புள்ளது. இதற்கு Food Aggression எனப் பெயர்.

தெரு நாய்கள் | கோப்புப் படம்

சிறுவயதிலேயே அதிகமாக மனிதரால் பாதிக்கப்பட்ட நாய்கள். (நாய்களை கல்லால் அடிப்பது, சுடு தண்ணீர் ஊற்றுவது), தன் பழைய நினைவுகளில் பதிந்துள்ள மனித செயல்களின் அடிப்படையில் பாதுகாப்பைக் கருதி கடிக்க வாய்ப்புள்ளது.

நேப்பியர் பாலத்தில் நிற்கும் நாய்

நாய் துரத்தும்போது ஓடக் கூடாது. திரும்பி நின்று சத்தம் போட்டு மிரட்ட வேண்டும். அப்படி மிரட்டும்போது நாய்கள் திரும்பிப் போக வாய்ப்பிருக்கிறது.

குட்டி போட்ட நாய்களின் பக்கத்தில் குழந்தைகளை விடக்கூடாது. குட்டிகளை எடுத்து விளையாடக் கூடாது.

pixabay

இரவு நேரங்களில் தெருநாய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

pixabay