புதுச்சேரி கடற்கரை சாலையில் பொதுமக்களின் புத்தாண்டுக் கொண்டாட்டம்!

அ.குரூஸ்தனம்

டிசம்பர் 31 மாலையிலிருந்து பொதுமக்கள் கடற்கரை சாலைப் பகுதிக்கு வரத் தொடங்கினர். போலீஸார் அவர்களைச் சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

புத்தாண்டைக் கொண்டாடக் கடற்கரைப் பகுதிக்கு வந்த குழந்தைகள், பெற்றோரைவிட்டுப் பிரிந்து சென்றால்கூட கண்டுபிடிக்கும்விதமாக குழந்தை பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் அடங்கிய ஸ்டிக்கரை போலீஸார் ஒட்டினர்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி புதுச்சேரி காவல்துறை அதிகாரிகள் கடற்கரை சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

கடும் கட்டுபாடுகளுக்கிடையே புத்தாண்டைக் கொண்டாட கடற்கரை காந்திசிலை அருகே குவிந்த பொதுமக்கள்.

கடற்கரை சாலைக்கு அத்துமீறிச் செல்ல முயன்ற பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

ஒருகட்டத்தில் கடற்கரை சாலைக்கு அத்துமீறி உள்ளே செல்ல முயன்ற இளைஞர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

போலீஸாரின் கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே புத்தாண்டு பிறந்ததைக் கொண்டாடும் பொதுமக்கள்.

புத்தாண்டை நடனமாடி வரவேற்கும் இளைஞர்கள்.

கடற்கரை சாலையில் புத்தாண்டைக் கொண்டாடும் திருநங்கைகள்.

புத்தாண்டு விழாவுக்குப் பிறகு பொதுமக்களை கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்றிய பின்னர், துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.