மு.பூபாலன்
ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வரும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கதுரியா, ஈபிள் டவர் அருகில் நின்று கொண்டு ஹன்சிகாவிடம் தன் காதலை தெரிவிக்கும் புகைப்படம் சமீபத்தில் வைரலாகியிருந்தது.
இப்புகைபடத்தை ஷேர் செய்திருந்த ஹன்சிகா, 'என்னைத் திருமணம் செய்து கொள்வாயா'என்று மகிழ்ச்சியுடன் தன் காதலை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டமானது கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அன்று 'மாதா கி சௌகி' நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக ஆரம்பமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டை பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு திருமண நிகழ்ச்சி தாயாரானது. இதற்கு முன்னர், ஹன்சிகாவின் அண்ணன் திருமணமும் இக்கோட்டையில்தான் நடந்தது.
முதல் நாளில் தோழிகள் படைசூழ மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மெஹந்தியுடன் இருந்த ஹன்சிகாவுடன் குடும்பத்தாரும், நண்பர்களும் புகைப்படம் எடுக்கும் நிகழச்சி நடைபெற்றது.
இரண்டாவது நாளில் இசை நிகழ்ச்சியும் நடந்தது. சோஹைல் கதுரியா- ஹன்சிகா இருவரும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நடனமாடினர்.
இதையடுத்து நேற்று காலை மஞ்சள் வைக்கும் சடங்கு நடந்தது
இந்நிகழ்ச்சிகளுக்கும், திருமணத்திற்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சிவப்பு கலர் காஸ்ட்லியான லெஹங்கா உடை, தங்க ஆபரணங்கள் சகிதம் மணமேடைக்கு வந்தார் ஹன்சிகா.
இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்ட போது வான வேடிக்கைகளுடன் பட்டாசு வெடிக்கப்பட்டது. திருமண கோலத்துடன் இருக்கும் ஹன்சிகாவுடன் அவரது நண்பர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
சோஹைல் கதுரியா- ஹன்சிகா இருவருக்கும் சிந்தி முறைப்படி திருமணம் நடந்தது.
பின்னர், மணமக்கள் இருவரும் ஆசிபெற்று அனைவரிடமும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மணமக்கள் இருவரையும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் ஆசிர்வதித்து, வாழ்த்துகள் தெரிவித்தனர். வாழ்த்துகள் சோஹைல் கதுரியா- ஹன்சிகா