ஜே.இ.இ முதன்மைத் தேர்வு... இதெல்லாம் புதுமை மாற்றங்கள்!

அகஸ்டஸ்

அகில இந்திய அளவில் என்ஜினியரிங் சேர்க்கைக்கான ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2021ம் ஆண்டு முதல் மாறுகிறது.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என நான்கு முறை இந்தத் தேர்வு நடைபெறும்.

ஒரு மாணவர் ஒருமுறையோ, அல்லது அதிகபட்சமாக நான்கு முறைகளோ தேர்வு எழுதலாம். தவறுகளைத் திருத்திக்கொண்டு சிறப்பாக எழுதவே இத்தனை வாய்ப்புகள்.

நான்கு முயற்சிகளைச் செய்யும் ஒரு மாணவர், எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதுவே அவரது மதிப்பெண்ணாக கருதப்படும்.

ஒரே ஒருமுறை விண்ணப்பம் செய்துவிட்டு, நான்கு முறை தேர்வு எழுத முடியும். தேர்வுக் கட்டணத்தையும் மொத்தமாக செலுத்த முடியும்.

விண்ணப்பிக்க 16.01.2021 கடைசி நாள். எனினும், ஒவ்வொரு தேர்வு முடிவு வந்தபிறகும், நான்கு நாட்களுக்குப் புதிதாக விண்ணப்பிக்க முடியும்.

தேர்வுக் கட்டணத்தை Net Banking, Credit Card, Debit Card, UPI மற்றும் Paytm சேவைகள் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

இம்முறை ஜே.இ.இ தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியைத் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும்.

ஜே.இ.இ தேர்வை இம்முறை ஆன்லைனில் மட்டுமே எழுத முடியும்.

ஜே.இ.இ தேர்வில் B. Arch., B. Planning உள்ளிட்டவற்றுக்கு சில விதிமுறைகள் மாறும். விரிவான தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/