உலகின் அதிக மாசுபாடு நிறைந்த டாப் 10 நகரங்களின் பட்டியல் - இந்திய நகரங்கள் எத்தனை? | Visual Story

மு.பூபாலன்

ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (HEI) என்ற அமைப்பு அண்மையில் பாதுகாப்பான அளவை விட அதிக காற்று மாசுபாடுகள் கொண்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் இதோ!

இந்தப் பட்டியலில் முதலாவதாக இடம் பிடித்துள்ள நகரம் இந்தியாவின் டெல்லி. மேலும், அதிக மக்கள் தொகைக் கொண்ட நகரமாக உருவெடுத்து வரும் நகரமும் டெல்லிதான். இங்கு சராசரியாக ஒரு ஆண்டுக்கு 110 மைக்ரோகிராம்கள் (µg/m3) மாசுபாடுகள் வெளிப்படுகின்றன.

இரண்டாவது இடத்தைப் பிடித்த அடுத்த நகரமும் இந்தியாவில்தான். அது கொல்கத்தா. இதன் மாசுபாட்டின் அளவு ஆண்டுக்கு சராசரியாக 84 µg/m3 என்று கூறப்படுகிறது.

நைஜீரியாவில் உள்ள கானோ என்ற நகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு சராசரியாக ஒரு ஆண்டுக்கு 83.6 மைக்ரோகிராம்கள் (µg/m3) மாசுபாடுகள் வெளிப்படுகின்றன.

நான்காவது இடத்தில் இருப்பது பெரு நாட்டின் லிமா என்ற நகரம். இதன் மாசுபாட்டின் அளவு 73.2 µg/m3.

பங்களாதேஷின் மிகப்பெரிய நகரமாகவும் தலைநகராகவும் இருக்கும் டாக்கா இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் அளவு ஆண்டுக்கு 71.4 µg/m3.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரம் உலகளவில் மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதன் மாசுபாட்டின் அளவு 67.3 µg/m3.

நைஜீரியாவில் உள்ள லாகோஸ் இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு சராசரியாக ஒரு ஆண்டுக்கு 66.9 µg/m3 மாசுபாடுகள் வெளிப்படுகின்றன.

பாகிஸ்தானின் கராச்சி நகரம் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்ததுள்ளது. இதன் மாசுபாட்டின் அளவு 63.6 µg/m3.

சீனாவின் பெய்ஜிங் நகரம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இங்கு சராசரியாக ஒரு ஆண்டுக்கு 55 µg/m3 மாசுபாடுகள் வெளிப்படுகின்றன.

கானா நாட்டின் உள்ள அக்ரா நகரம் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது. இதன் மாசுபாட்டின் அளவு 51.9 µg/m3.