காடுகளைக் காக்கும் யானைகள்!

அ.பாலாஜி

ஒரு யானை தன் வாழ்நாளில் ஒரு காட்டையே உருவாக்குகிறது.. யானைகள் சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் வனத்தில் மண்ணில் விதைக்கப்படும். ஒரு நாளில் 300 - 500 விதைகள் விதைப்பதன் மூலமாக, அதில் ஒருநாளைக்கு 100 மரங்கள் வளர்வதாக சொல்கிறார்கள்.

யானைகள்

ஒரு யானை தன் வாழ்நாளில் சராசரியாக 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளர காரணமாகிறது. தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர், அகத்தியர் மலை ஆகிய இடங்களில் யானைகள் காப்பகங்கள் உள்ளன.

யானைகள்

யானைகள் வயதான பெண் யானையின் தலைமையில் கூட்டமாக வாழும்.  ஒரு குட்டி யானை பிறந்து விட்டால் அதை அந்தக் கூட்டத்தில் இருக்கும் அத்தனை யானைகளும் பாதுகாக்கும். ஒரு யானை இறந்து விட்டால் மற்றவை கவலையோடு கண்ணீர் சிந்தும்.

elephants

யானைகளுக்கு நீந்தும் திறன் அபாரமாக உள்ளது. எவ்வளவு ஆழமான நீர் நிலையானாலும் சரி.. தமது தும்பிக்கையை நீருக்கு மேலே நீட்டிக் கொண்டு அழகாக நீந்தி சென்று விடும்.

யானை வாழ்விடங்களில் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில், வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதை ஆக்கிரமிப்பு, வனத்தில் அமைக்கும் தண்டவாளங்கள், சாலைகள் போன்ற பல்வேறு காரணங்களால் அழிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

யானைகள் மிகக் கூர்மையான கண் பார்வையும், மோப்ப சக்தியும் கொண்டது. 5 கிமீ தூரத்தில் தண்ணீர் இருந்தாலும் மோப்ப சக்தியால் தெரிந்து கொண்டு அங்கு சென்றுவிடும்..

யானைகள்

காடுகளை காப்பதில் யானைகளின் பங்கு முக்கியமானது. யானைகள் தனக்கு மட்டுமன்றி மற்ற வன விலங்குகளின் உணவு தேவையையும் பூர்த்தி செய்து, பல்லுயிர் வளத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது. யானைகள் இருக்கும் வனப்பகுதி வளமாக இருக்கும்.

யானைகள்

யானைகள் அழிந்தால் காடுகள் முற்றிலும் அழியும். காடுகள் அழிந்தால் மனிதர்கள் வாழவே முடியாது. எனவே இயற்கை சமநிலையை காக்க யானையை காப்பது நமது கடமையாகும்.