தண்ணீரை தங்கம் போல் சேகரிக்க வேண்டும்; ஏன் தெரியுமா? | Visual Story

கி.ச.திலீபன்

உலகின் மொத்த நீரில் 3 சதவிகிதம் மட்டுமே நன்னீர் உள்ளது. அதிலும் 1.5% பனிப்பாறைகளாக உறைந்து கிடப்பதால் நம் பயன்பாட்டுக்கு 1.5 % நீரே உள்ளது.

எவ்வளவு செலவழித்தாலும் மழை பெய்வதன் மூலம் நமக்குத் தண்ணீர் கிடைத்துவிடும் என நினைக்கிறோம். இன்றைய பருவநிலை மாற்றத்தில் மழை பெய்யும் அளவு, காலம் என எல்லாமே மாறிவிட்டது.

coonoor rain

சென்னையில் 4 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சமீப காலங்களில் மூன்றே நாள்களில் கொட்டித் தீர்த்துவிடுகிறது. பெய்கிற மழை நிலத்துக்குள் இறங்குவதற்கான வாய்ப்பில்லாமல் கடலில் கலக்கிறது.

சென்னை மழை

நிலத்தடி நீர் உப்புக்கரிக்கக் காரணம் புவியில் நன்னீர் குறைவாக இருப்பதுதான்.

நிலத்தடி நீர்

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும் என்கிற விதிமுறையை ஒழுங்காகப் பின்பற்றப்படுவதை கவனிக்க வேண்டும்.

கழிவுநீர் -Representational Image

ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு அவற்றில் தண்ணீர் சேகரிக்கப்பட வேண்டும். முடிந்த வரை நீர் மாசுபாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தூர் வாரும் பணி (கோப்பு படம்)

முடிந்த வரை தண்ணீரை சேமிப்பதோடு, சிக்கனமாகவும் செலவு செய்ய வேண்டும். நீர்நிலைகளை மாசுபடுத்தக் கூடாது.

Water | Photo by mrjn Photography on Unsplash

இன்றைய சூழலில் இந்தியாவுக்குத் தங்கத்தைவிட நன்னீரின் தேவையே அதிக அளவில் இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

குளம், கண்மாய்களில் சேகரிக்கப்படும் தண்ணீர்