கொரோனா ஊரடங்கில் காவல்துறை! #Rewind2020

விகடன் டீம்

திருநெல்வேலி: ஊரடங்கு காலத்தில் வாகனத்தில் செல்லும் நபர்களை கண்டிக்கும் போக்குவரத்துக் காவலர்!

புதுச்சேரி: கொரோனா காலத்தில் பணியிலிருக்கும் பெண் காவல்துறை அதிகாரி, தன் குழந்தையுடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொள்ளும் காட்சி!

திருச்சி: கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றித் திரிந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆயுதப்படை மைதானத்தில் வைத்திருந்த காட்சி.

தஞ்சாவூர்: கொரோனா காலத்தில் குடும்பத்துடன் செல்லும் நபரைக் கண்டிக்கும் காவல்துறை!

ராமேஸ்வரம்: ஊரடங்கு காலத்தில் உணவின்றி தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ரொட்டித் துண்டுகளைக் கொடுக்கும் காவலர்!

தஞ்சை: காவலர்களுக்குக் காய்ச்சல் பரிசோதனை செய்யும் காட்சி!

மதுரை: காவல்துறையினர் கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளியே செல்வதற்கான அனுமதி அட்டையைச் சோதனை செய்கின்றனர்!

மயிலாடுதுறை : முதியவருக்கு உதவும் காவல்துறை!

ராமநாதபுரம்: ஊரடங்கு சமயத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில்தான் வெளியே வர வேண்டும் என்று காவல்துறையினரால் வாகனங்களுக்கு வர்ணம் பூசப்படுகிறது!

கடலூர்: ஊரடங்கின்போது தேவையில்லாமல் ஆட்டோக்களில் சுற்றிக்கொண்டிருந்தவர்களைக் கண்டிக்கும் காவல்துறை!