சி. அர்ச்சுணன்
உலக அரங்கில் இந்தியாவுக்கென தனி அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கி, எல்லோரும் எல்லோர்க்கும் சமம் என அடிப்படை உரிமையை பெற்றுத்தந்த அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று.
எத்தகைய தீண்டாமை, சுரண்டல், வன்முறைக்கும் கல்வி மட்டுமே தீர்வு எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், தனக்கு நேர்ந்த அத்தனை தீண்டாமைகளையும் கல்வியின்பால் உடைத்தெறிந்தவர்.
எங்கெல்லாம் உரிமை மறுக்கப்பட்டதோ அங்கெல்லாம் தவிர்க்க முடியாத சக்தியாய் நின்றவர், நிற்பவர் அண்ணல் அம்பேத்கர்.
`சுதந்திர இந்தியாவில் அனைவரும் சமம் என்பதை உணர, உணர்த்த கற்பி! ஒன்று சேர்!! புரட்சி செய்!!!' என்று முழக்கவிட்டவரின் தேவை இன்றளவும் இருக்கிறது. அதற்கு அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதும், அவரின் எழுத்துக்களை வாசிப்பதும் முக்கியம்.
அம்பேத்கர் எழுதிய புத்தகங்களின் தலைப்புகளே, அதனை வாசிக்கத்தூண்டும் முன்னுரையாக எளிதாக வாசகர்களின் மனதில் பதிந்துவிடும். அவற்றில் சில...
1. English: Caste in India
தமிழில்: இந்தியாவில் சாதிகள்
2. English: Annihilation of caste
தமிழில்: சாதியை அழித்தொழித்தல்
3. English: The Buddha and His Dhamma
தமிழில்: புத்தரும் அவர் தம்மமும்
4. English: Riddles in Hinduism
தமிழில்: இந்து மதத்தில் புதிர்கள்
5. English: Who were the Sudras
தமிழில்: சூத்திரர்கள் யார்?
6. English: The Untouchables
7. English: Problem of Rupee
அம்பேத்கரை மொத்தமாக ஒரே தொகுப்பில் படிக்க - ``அம்பேத்கர் இன்றும் என்றும்"
பரந்து விரிந்த நீல வானின் கீழ் யாவரும் சமமே!