ஆணுறுப்பு சைஸில் குழப்பமா? இப்படி அளவிடுங்க! #VisualStory

இ.நிவேதா

வெளியே யாரிடமும் சொல்ல முடியாம, பல ஆண்கள் தவிக்கிற ஒரு பிரச்னை, `என் ஆணுறுப்பு சின்னதா இருக்கு/இருக்கோ' அப்படீங்கிற பயம்.

pixabay

தன் உறுப்போட அளவு பத்தி வருத்தப்படுறது, எல்லா நாட்டு ஆண்களிடமும் இருக்கு. ஆணுறுப்போட அளவு நாடுகளைப் பொறுத்து மாறுபடும். உதாரணத்துக்கு, ஜப்பான் ஆண்கள் உறுப்பின் சராசரி அளவு 4 - 4.5 இன்ச். இந்திய ஆண்களுக்கு 5 - முதல் 5.5 இன்ச்.

pixabay

ஆணுறுப்பைப் பொறுத்தவரைக்கும் Shower penis, Grower penisனு இரண்டு வகை இருக்கு. சிலருக்கு விறைப்புத்தன்மை அடையாத நிலையிலேயே பெருசா இருக்கும். அவங்களுக்கு விறைப்புத்தன்மை வந்தாலும் அளவுல பெரிய வித்தியாசம் தெரியாது. இது `Shower penis'.

Couple | Photo by Womanizer Toys on Unsplash

சிலருக்கு விறைப்படையாத நிலைமையில் சிறியதா இருக்கும். விறைப்படைஞ்ச பிறகு நார்மல் அளவுக்கு வந்துடும். இது `Grower penis'.

Couple (Representational Image) | Photo by cottonbro from Pexels

அதாவது, விறைப்படையுறப்போ ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுல வந்திடும். ஆனா, ’அவனுக்கு விறைப்படையறதுக்கு முன்னாடியே பெருசா இருக்கே’ன்னு சிலரும், ’விறைப்படைஞ்ச பிறகும் பெருசா வித்தியாசம் தெரியலையே’ சிலரும் பயந்திட்டிருப்பாங்க.

Couple(Representational image) | Pixabay

இது உண்மையில ஒரு பிரச்னையே இல்லை. இல்லாத பிரச்னையை மிகைப்படுத்திக்கிட்டு, அவங்களே அவங்களை வருத்திக்கிட்டு இருப்பாங்க.

pixabay

அதேபோல, ஆண் பிள்ளைகளோட உறுப்பு வயசுக்கேற்ற வளர்ச்சியில இருக்காங்கிறதைச் தெரிஞ்சுக்கிறது முக்கியம். இந்தக் கடமை அப்பாக்களுக்கு அவசியம் இருக்கணும். சிங்கிள் பேரன்ட்டா இருந்தா அம்மா செய்யட்டும்.

Image by Free-Photos from Pixabay

அபூர்வமா ஒரு சில ஆண் குழந்தைகளுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமா, ஆணுறுப்பு வளர்ச்சி குறைவா இருக்கும். இதை 10 வயதுக்குள்ளேயே கண்டுபிடிச்சிட்டா ஹார்மோன் சிகிச்சை கொடுத்து சரிசெஞ்சுடலாம்.

Hormones | pixabay

கொஞ்சம் தாமதமா பியூபர்ட்டி நிலை அடையுற ஆண் குழந்தைகளுக்கு, அதன் பிறகு உடல் வளர்ச்சியும் ஆணுறுப்பு வளர்ச்சியும் ஏற்படும். இதை அப்பாக்கள் ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும். வாய்ப்பில்லைன்னா அம்மாக்களும் சொல்லித் தரலாம்.

Photo by Daiga Ellaby on Unsplash

ஆபாசப் படங்களும், ஆணுறுப்பு தொடர்பா நண்பர்களுடனான உரையாடல்களும் தான் ஆண்களின் பயத்துக்கான காரணம். ஆபாசப் படங்கள்ல பெருசா தெரியுறதுக்கு, செயற்கையா ஏதாவது செய்யலாம்; இல்லைன்னா கேமரா ஆங்கிள் அப்படி இருக்கலாம்.

நண்பர்களைப் பொறுத்தவரைக்கும், இமேஜ் பில்டப்புக்காக தன்னோட ஆணுறுப்பு நீளத்தை பெருசா சொல்லலாம். இதெல்லாம் தெரியாம, சில ஆண்கள் கல்யாணத்தைத் தள்ளிப்போடுறாங்க. சிலர் கல்யாணம் செஞ்சுக்கவே பயப்படுறாங்க.

Couple | Pixabay

சிலருக்கு ஆணுறுப்பு வளர ஆரம்பிக்கிற இடத்தில் கொழுப்பு அதிகமா இருக்கும். இந்தக் கொழுப்பே சிலருக்கு 2 இன்ச் அளவுக்கு இருக்கும். இது தெரியாம அந்தக் கொழுப்புக்குக் கீழே இருந்து அளந்தா, ஆணுறுப்பு 2 அல்லது 3 இன்ச்தான் இருக்கும்.

(Representational Image) | Pixabay

இதுவே ஆணுறுப்பு ஆரம்பிக்கிற கொழுப்புப் பகுதியிலிருந்து அளந்து பார்த்தா 5 இன்ச் வரைக்கும் இருக்கும். இந்திய ஆண்களுக்கு இது நார்மல்தான்.

Adolescent boys and girls | pixabay

இன்னும் தெளிவா சொல்லணும்னா, ஆணுறுப்பின் மேலே ரோம வளர்ச்சி ஆரம்பிக்கிற இடத்தை அழுத்தினா ஓர் எலும்பு விரலில் தட்டுப்பட்டும். அந்த எலும்பில் இருந்துதான் ஆணுறுப்பு தொடங்குது. இங்கிருந்துதான் அளக்கணும்.

pixabay

’இப்படி அளக்கிறதுக்கு எனக்குத் தெரியலை’னு சொல்றவங்க, `மிரரிங் டெக்னிக்'னு இன்னொரு வழியில உங்க உறுப்போட சரியான நீளத்தை தெரிஞ்சுக்கலாம்.

pixabay

ரோமத்தை அகற்றிட்டு, கண்ணாடியில ஆணுறுப்பைப் பாருங்க. உண்மையான நீளத்தை நீங்களே கண்டுபிடிச்சிடலாம். குறிப்பா, குழப்பம் இருக்குற ஆண்கள் இந்த மிரரிங் டெக்னிக்கை பயன்படுத்தலாம்.

pixabay