கண்களைப் பாதிக்கும் டிஜிட்டல் திரைகள்; எப்படி பாதுகாப்பது? I Visual story

இ.நிவேதா

டிஜிட்டல் யுகத்தில் மொபைல் போன், டிவி போன்ற சாதனங்களை அதிக நேரம் பார்ப்பதிலேயே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செலவிடுகின்றனர்.

அதிக நேரம் திரையைப் பார்ப்பது கண்களைப் பாதிப்பதோடு, தலைவலி, கண் சோர்வு, உலர் கண்கள், கண் எரிச்சல் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

ஒரு புத்தகத்தைப் படிப்பதைவிட, கணினித் திரையைப் பார்க்கும்போது மக்கள் குறைவாகவே கண் சிமிட்டுகிறார்கள்.

பலர் திரைகளை சரியான தொலைவில் வைத்துப் பார்க்காமல், கண்களுக்கு மிக அருகில் வைத்து பார்க்கும் பழக்கம் கொண்டுள்ளனர்.

கண்களின் வறட்சி, எரிச்சலைத் தவிர்க்க, டிஜிட்டல் திரையைப் பார்க்கும்போது அடிக்கடி கண்களை இமைக்க முயல வேண்டும்.

கணினி திரை அல்லது வேறு திரைகளைக் குறைந்தபட்சம் 25 அங்குலம் / முழங்கை நீளம் தள்ளி வைத்தே பார்க்க வேண்டும்.

ஸ்மார்ட் போனை உங்கள் கண்களில் இருந்து குறைந்தது 20 அங்குல தூரத்தில் வைத்துப் பயன்படுத்துவது நல்லது.

அறையில் வெளிச்சத்தை சரிசெய்து, திரையில் கான்ட்ராஸ்ட்டை உயர்த்தி உங்கள் பார்வைக்கு ஏற்ற வகையில் வைத்துக் கொண்டு, கண்ணை கூச வைக்காத வகையில், Brightness-ஐ முறைப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறையும், டிஜிட்டல் திரையிலிருந்து 20 விநாடி இடைவெளி எடுத்து 20 அடி தொலைவில் உள்ள பொருளைப் பார்க்க வேண்டும்.

கைபேசி, பிற திரைகளில் வெளியிடப்படும் நீல நிற ஒளி உடலின் இயற்கையான தூக்க - விழிப்பு சுழற்சியைப் பாதிக்கலாம்.

தூங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு முன்பே மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது, நிறுத்திவிடுவது நல்லது.

டிஜிட்டல் திரைகளில் நீல நிற ஒளி வெளியிடப்படுவதைக் குறைக்க `ரீட் மோட்' அல்லது `நைட் விஷன்' முறைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.