அஸ்ஸாம்: தொடரும் கனமழை; மிதக்கும் 30 மாவட்டங்கள்; தவிக்கும் 45 லட்சம் மக்கள் - வெள்ள பாதிப்புகள்

சாலினி சுப்ரமணியம்

அஸ்ஸாமில் வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்திருக்கிறது.

30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 30 மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் அமைக்கப்பட்டுள்ள 759 நிவாரண முகாம்களில் மொத்தம் 2.84 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் உள்ள 4,536 கிராமங்கள் இன்னும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தால் 173 சாலைகள் மற்றும் 20 பாலங்கள் சேதமடைந்துள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 8 குழுக்கள் 207 பணியாளர்களுடன் பராக் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் மீட்பு, நிவாரணம் மற்றும் பிற அவசரகால சூழ்நிலைகளுக்காக மாநில அரசு அவசர உதவி எண் 0361-2237219, 9401044617, 1079 (கட்டண இலவசம்) தொடங்கியுள்ளது.

கோபிலி, திசாங் மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளில் பல இடங்களில் அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அஸ்ஸாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால், மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

அஸ்ஸாமில் வெள்ளம் | ட்விட்டர்