சு.உ.சவ்பாக்யதா
மியான்மரில் வெள்ளிக்கிழமையன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பியத் தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்தது.
இங்கிலாந்தில் மன்னர் சார்லஸின் உருவம்கொண்ட நாணயங்கள் முதன்முதலாக வெளியிடப்படவிருக்கின்றன. 50 பென்ஸ் நாணயங்களில் அவை பொறிக்கப்படவிருக்கின்றன.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், நாசா இணைந்து ஹபுல் விண்வெளி தொலைநோக்கியின் சுற்றுப்பாதையை உயர்த்துவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட முடிவெடுத்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் இருக்கும் ஒரு பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
பிரேசிலில் வரும் அக்டோபர் 2-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், அந்த நாட்டில் முன்பில்லாத அளவுக்குத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களும், பதற்ற சூழலும் காணப்படுகின்றன.
பருவநிலை மாற்றத்தை எதிர்த்து இஸ்லாமாபாத்தும் டெல்லியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியிருக்கிறார்.
ஸ்பெயினில் 12 உடன்பிறந்தவர்களின் ஒரு சேர்ந்த வயது 1,058 ஆண்டுகள், 249 நாள்களாக உறுதிப்படுத்தப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது.
கிர்கிஸ்தானில் உள்ள நாடற்ற அகதிகளுக்காகப் போராடிய மனித உரிமை வழக்கறிஞர் அசிஸ்பெக் அசுரோவ் ஐநா-வின் மதிப்புமிக்க நான்சென் விருதை வென்றிருக்கிறார்.
டாக் ஷோ தொகுப்பாளரான ட்ரெவர் நோவா, ஏழாண்டுகளாகத் தொகுத்த நகைச்சுவை நிகழ்ச்சியான 'தி டெய்லி ஷோ' -விலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.