`ஆப்சென்ட் ஆன புதின் முதல் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா வரை..!' - ஜி-20 உச்சிமாநாடு ஹைலைட்ஸ்

சி. அர்ச்சுணன்

ஜி-20 அமைப்பின் மாநாடு, இந்தோனேஷியாவின் பாலி நகரில் நேற்று, இன்று இரண்டு தினங்களாக நடைபெற்றது.

ஜி-20 மாநாடு

பிரதமர் மோடி, ஜோ பைடன், ஜஸ்டின் ட்ரூடோ, ஜி ஜின்பிங் உட்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். ரஷ்யா சார்பில் புதினுக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டார்.

ஜி-20 மாநாடு

இந்த மாநாட்டின் மூலம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தான் பதவியேற்ற நாளிலிருந்து முதன்முறையாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்தார்.

ஜி-20 மாநாடு

மாநாட்டில் சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து உலக தலைவர்கள் கலந்துரையாடினர்.

ஜி-20 மாநாடு

``போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான பாதையைக் கண்டெடுக்க வேண்டும். உக்ரைன் மோதலை ராஜதந்திரம் மூலம் தீர்க்க வேண்டும்." - மோடி

ஜி-20 மாநாடு

முதல்நாளில் இந்தோனேஷிய அதிபர் ஜோக்கோ விடோடோ(Joko Widodo) கொடுத்த இரவு விருந்தில், உலக தலைவர்கள் அனைவரும் கண்கவர் விளக்குகளின் வெளிச்சத்தில் கலர்ஃபுல் உடைகளில் வலம்வந்தனர்.

ஜி-20 மாநாடு

இரண்டாம் நாளில் ஜி-20 தலைவர்கள், பாலியில் உள்ள மாங்குரோவ் வனத்தில் செடிகள் நட்டு கலந்துரையாடினர்.

ஜி-20 மாநாடு

``உக்ரைன் போர், உலகப் பொருளாதாரத்தில் இருக்கும் பலவீனங்களை அதிகரிக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பு, நிதி ஸ்திரத்தன்மை, விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்தல், ஆற்றல் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை அபாயங்களை உயர்த்துகிறது" - ஜி-20 தலைவர்கள்

ஜி-20 மாநாடு

உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர ஜி-20 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஜி-20 மாநாடு

``இன்றைய சகாப்தம் போராக இருக்கக்கூடாது!" - மோடி

ஜி-20 மாநாடு

இந்தோனேஷிய அதிபர் ஜோக்கோ விடோடோ கையால், ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி இன்று பெற்றுக்கொண்டார்.

ஜி-20 மாநாடு