மஸ்க் என்ட்ரி... ட்ரம்ப் ரியாக்‌ஷன் | டி-ரெக்ஸ் டைனோசரின் எலும்புக்கூடு | உலக செய்திகள் ரவுண்ட்-அப்

க.ஶ்ரீநிதி

முன்கூட்டியே தேர்தல் நடத்தக்கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தில் பேரணி.

K.M. Chaudary

எத்தியோப்பியாவின் டிக்ரே பகுதியில் எந்த விதமான மருந்துகளும் இருப்பில் இல்லை என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், தான் தனது ட்ரூத் என்ற சமூக வலைத்தள பக்கத்தைத் தொடர்ந்து உபயோகிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு 2021ம் ஆண்டு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ராக் அன்ட் ரோல் நட்சத்திரம் ஜெர்ரி லீ லெவிஸ் காலமானார். அவருக்கு வயது 87

Reed Saxon

ட்விட்டரில் எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக அதிக பங்குகளை வைத்திருக்கிறார் சவுதியின் இளவரசர் அல்வாலீத் பின் தலால்.

ஐ.நாவின் கால நிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

ஜோ பைடன்

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வீட்டில் புகுந்த மர்ம நபர் அவரின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Kevin Wolf

ஹிட்லரின் கொடுமைகளை விவரித்த அன் ஃப்ரான்கின் நெருங்கிய தோழி ஹன்னா கோஸ்லார் காலமானார்.

JACQUELINE LARMA

பிலிப்பைன்ஸில் நால்கே புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 72 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள டி-ரெக்ஸ் டைனொசரின் எலும்புக்கூட்டினைக் காண மக்கள் ஆர்வம்.