உலகின் உயரமான பெண்ணின் முதல் விமானப் பயணம் முதல் இம்ரான் கான் வீடியோவரை - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

சு.உ.சவ்பாக்யதா

இளவரசர் வில்லியமின் எர்த் ஷாட் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களில் இரண்டு இந்தியர்களின் திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்ரன. இதன் முடிவுகள் அடுத்த மாதம் பாஸ்டன் நகரில் அறிவிக்கப்படவிருக்கின்றன. சுற்றுச்சூழலை மையமாகவைத்து இந்த விருது கொடுக்கப்படுகிறது.

ருமேசா கெல்கி தன் உயரம் காரணமாக விமானங்களில் பயணிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார். ஆனால், இது தனக்கு மறக்க முடியாத பயணம் எனக் கூறினார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்டு, தன்னை நான்கு முறை காலில் சுட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க எம்.பி-யை நோக்கி "ஆப்பிரிக்காவுக்கே திரும்பிப் போ" என்று பிரான்ஸ் நாட்டின் எம்.பி கிரிகோயர் கூச்சலிட்டதையடுத்து, அவர் 15 நாள்களுக்கு நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

நார்வே, தான் பயன்படுத்திய 32, F-16 போர் விமானங்களை நேட்டோ உறுப்பினரான ருமேனியாவுக்கு விற்க முடிவு செய்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் ஓபியம் சாகுபடி இந்த ஆண்டு மட்டும் 32 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாக ஐ.நா தெரிவித்திருக்கிறது

இங்கிலாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் இந்தியர்களே அதிகப்படியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Kin Cheung

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் இடது கையின் பிளாஸ்டர் வார்ப்பு ஏலத்தில் விடப்பட்டிருக்கிறது. சுமார் 40,000 பவுண்டுகள் ($46,046) வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நெமன் என்ற கலைஞரால் 1985-ல் செய்யப்பட்டது.

கென்யாவில் நீடித்துவரும் வறட்சியின் காரணமாக நூற்றுக்கணக்கான யானைகளும், வரிக்குதிரைகளும் இறந்துவருகின்றன.