ஆப்கனில் பெண்களுக்கு புதிய தடை | சொகுசு கப்பலில் 800 பேருக்கு கொரோனா | உலகச் செய்திகள் ரவுண்ட்-அப்

சு.உ.சவ்பாக்யதா

நகைச்சுவை நடிகரான கிரிஸ் ராக், நெட்ஃபிளிக்ஸில் நேரலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறார். ஸ்ட்ரீமிங் மேடையில் நேரலையில் நிகழ்ச்சி நடத்தும் முதல் கலைஞராக நடிகர் கிறிஸ் ராக் இருப்பார் என்று நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்திருக்கிறது.

ஈரானிய வில்வித்தை வீராங்கனையான பர்மிதா கசெமி, தெஹ்ரானில் நடந்த விருது வழங்கும் விழாவில் தனது ஹிஜாபை கழற்றி அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காபூலில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களில் பெண்கள் நுழைவதுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது மீண்டும் புதிய கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சீனாவின் கோவிட் தொற்று எண்ணிக்கை 10,535 -தை எட்டியிருக்கிறது.

நைஜீரியாவில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழ்ந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்ரேல் பிரதமராக மீண்டும் பதவியேற்க இருக்கும் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வ ஆணையை வழங்குவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது. நெதன்யாகு நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகக் கடுமையான பசி நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் மக்கள் தவித்து வருவதாக ஐநா தெரிவித்திருக்கிறது. காபூல் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்து வருவதாகவும் அங்கு வசிப்பவர்கள் கவலை தெரிவித்தனர்.

Burhan Ozbilici

மெக்ஸிக்கோவை சேர்ந்த நடிகை ஏஞ்சலிகா வேல்ஸுக்கு `The Hollywood Walk of Fame'-ல் ஸ்டார் அந்தஸ்து வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது.

Chris Pizzello

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் நிற்கும் மெஜஸ்டிக் சொகுசு கப்பலில் இருக்கும் பயணிகளில் 800-க்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.