இறந்துபோன 2,500 நீர் நாய்கள் | நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள் | உலக செய்திகள் ரவுண்ட்அப்

க.ஶ்ரீநிதி

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, தன் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை சட்டப்பூர்வமாக எதிர் கொள்ளப்போவதாகவும், தன் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

சூடானில், மக்களாட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் ராணுவம் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில், நீதி அம்சம் சேர்க்கப்படாததால் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Marwan Ali

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைப் பார்வையிட்ட பாகிஸ்தானின் புதிய ராணுவ அதிகாரி அசிம் முனிர், ‘தாய்நாட்டை’ பாதுகாக்கப் போவதாக உறுதியளித்திருக்கிறார்.

W.K. Yousufzai

சமீபத்தில் ரஷ்யா நடத்திய கடுமையான தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் என உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ஆனால் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் அபுஜா, கடுனா வழித் தடத்தில் நடந்த ரயில் தாக்குதலுக்குப் பிறகு எட்டு மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் இந்த தடத்தில் ரயில் சேவைகள் துவங்கியது.

Chinedu Asadu

காங்கோவில் M23 போராட்டக் குழு நடத்திய தாக்குதலில் 272 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை போராட்டக் குழு முற்றிலும் மறுத்துள்ளது.

கொலம்பியா நாட்டில் ரிசாரால்டா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்

ஆக்ஸ்போர்டு அகராதியின் இந்த ஆண்டிற்கான சொல்லாக Goblin Mode தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இது சோம்பேறித்தனம், பேராசை உள்ளிட்டவற்றைக் குறிக்கும் சொல்.

ரஷ்யாவின் காப்சிகோ கடற்கரையில் 2,500 நீர் நாய்கள் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு. இதன் காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்தோனேசியாவில் வெடித்த செமேரு எரிமலையால் சாம்பல் சூழ்ந்து, நெருப்புக் குழம்பு வெளிவரத்துவங்கியது. மக்கள் பாதுகாப்பான வேறு பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.