புகழ்பெற்ற ராக் கிடார் கலைஞர் மரணம்|கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட புயலால் 17 பேர் பலி - உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

ஆப்கானிஸ்தானின் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அருகில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர்.

நான்கு டைனோசர் இனங்களின் எச்சங்கள் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

உக்ரைனிலுள்ள தனது உயர்மட்ட ராணுவத் தளபதியை மீண்டும் மாற்றியிருக்கிறது ரஷ்யா. தற்போது புதிய ராணுவத் தளபதியாக வேலரி கெராசிமோவ் (Valery Gerasimov) நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட புயலால் இதுவரை 17 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், மீண்டும் புயல் வருவதற்கான அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக 5,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

Joe Burbank

இரானில் உளவு பார்த்ததற்காக இரான்-பிரிட்டிஷ் குடிமகன் அலிரெஸா அக்பாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஹைத்தி நாட்டில் ஏற்பட்டிருக்கும் வன்முறையைக் கட்டுப்படுத்த கனடா அரசு தனது படைகளை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது.

Adrian Wyld

பிரேசில் நாட்டில் வன்முறையில் ஈடுபட்ட தன்னுடைய ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதாக போல்சனாரோ அறிவித்திருக்கிறார்.

Andre Penner

புகழ்பெற்ற ராக் கிடார் கலைஞர் ஜெஃப் பேக் காலமானார்.

Yui Mok

இங்கிலாந்து இளவரசர் ஹாரி எழுதிய 'Spare' புத்தகம் முதல் நாளிலேயே 1.4 மில்லியன் பிரதிகள் இங்கிலாந்தில் விற்பனையாகியிருக்கின்றன.