டோக்கியோவில் சட்டபூர்வமான தன்பாலின உறவு|சுட்டுக் கொல்லப்பட்ட பாப் பாடகர்| உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

க.ஶ்ரீநிதி

தென் கொரியாவை நோக்கி மூன்று ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது வட கொரியா.

ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு எட்டு டாலர் மாதம்தோறும் வசூல் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

எலான் மஸ்க்

துருக்கி அதிபர் எர்டோகன் ரஷ்யா-உக்ரைன் நாட்டுத் தலைவர்களுடன் தானிய வர்த்தகம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு.

Burhan Ozbilici

டோக்கியோவில் சட்டபூர்வமானது தன்பாலின உறவு. பதிவுசெய்து சான்றிதழ்களைப் பெற்றவர்கள் குறிப்பிட்ட வேலைகளில் விண்ணப்பிக்கும்போது அவர்கள் திருமணமானவர்களாகக் கருதப்படுவர்.

டெக்சாஸில் 28 வயதான ராப் இசைக் கலைஞர் டேக்ஆஃப் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Jordan Strauss

அமெரிக்காவில் பெண்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகளை வழிநடத்திய குற்றத்துக்காக ஆலிசன் ஃப்லூக் எக்ரென் என்றவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம்.

ஆப்பிரிக்காவின் மிகவும் பெரிய பெண் யானை டிடா, கென்யாவில் இறந்தது.

ராணுவ செயற்கைக்கோளை சுமந்து செல்லும் சோயுஸ் ராக்கெட்டை ரஷ்யா ஏவியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.