50% ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மஸ்க்? | இம்ரான் மீது துப்பாக்கிச்சூடு - உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

எலான் மஸ்க் ட்விட்டரில் பணிபுரிபவர்களில் 50% தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Jeff Chiu

உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களை மீறினால், தானிய ஒப்பந்தத்தைவிட்டு வெளியேறுவதாக ரஷ்ய அதிபர் புதின் முடிவு செய்திருப்பதாகத் தகவல்.

புதின்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் பங்கேற்ற பேரணியில் துப்பாக்கிச்சூடு. அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டதாகத் தகவல்.

K.M. Chaudary

பிரேசில் பிரதமராக லுலா ஜனவரி 1-ம் தேதி பதவியேற்கவிருக்கும் நிலையில், பொல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் ராணுவம் தலையிட வேண்டும் என்று பேரணி நடத்தினர்.

BRUNA PRADO

10 பில்லியின் டாலர் மதிப்பிலான ரயில் பாதை திட்டத்தைத் தொடங்க சீனாவும் பாகிஸ்தானும் முடிவு.

Yao Dawei

கடந்த 30 ஆண்டுகளில், ஐரோப்பாவின் தட்பவெப்பநிலை இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்திருக்கிறது.

Michael Probst

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள பள்ளியை ஒரு செங்கல்கூட விட்டு வைக்காமல் திருடிய கும்பலால் மக்கள் அதிர்ச்சி.