துபாயில் பிரமாண்ட இந்துக் கோயில்|பயணத்தைத் தொடங்கிய விமானம் தாங்கி கப்பல்-உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

சு.உ.சவ்பாக்யதா

இந்திய-அரேபிய கட்டுமானக் கலையின் கலவையாக, துபாயில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்துக் கோயில் திறப்பு.

Kamran Jebreili

கூகுள் நிறுவனம், சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் அதன் மொழிப்பெயர்ப்பு சேவையை, பயன்பாடு அளவு குறைந்துவிட்டதால் நிறுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது.

முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் மதிப்புமிக்க `நான்சென்' விருதை வென்றிருக்கிறார்.

Michael Sohn

எலான் மஸ்க், ட்விட்டரின் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தைத் தொடர முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க்

விரைவில் வெளியாகவிருக்கும் `Black Panther: Wakanda Forever'-ன் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.

ஆர்லீன் சூறாவளி மெக்சிகோவின் மசாட்லான் கரையைத் தாக்கியது.

Fernando Llano

அமெரிக்காவுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல் (Gerald R. Ford) தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. இந்தக் கப்பல் நேட்டோ நாடுகளுடன் பயிற்சியில் ஈடுபடுத்தப்படவிருக்கிறது.