விண்வெளிக்கு குரங்கை அனுப்பும் சீனா|காவலர் வங்கிக் கணக்கில் விழுந்த ரூ.100 மில்லியன்-உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

எந்த இடத்தில் வைத்து சுடப்பட்டாரோ, அங்கிருந்தே செவ்வாய்க்கிழமை தன்னுடைய நடைப்பயணத்தை தொடரப்போவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கூறியிருக்கிறார்.

தாலிபன் அமைப்பை நிறுவிய முல்லாஹ் ஒமர் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஒன்பது ஆண்டுகள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ், ஒக்லஹோமா பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதில், நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

LM Otero

ஸ்பெயினில் திருமண நிகழ்ச்சியின்போது கார் வேகமாக மோதியதில், நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பாகிஸ்தானில் காவல் அதிகாரியின் வங்கிக் கணக்குக்கு 100 மில்லியன் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

தான்சானியாவில் PW- 494 விமானம், விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உயிரிழந்தனர்.

சீனா, டியாங்காங் விண்வெளி நிலையத்துக்குக் குரங்குகளை அனுப்பவிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. பூஜ்ய புவியீர்ப்பு சூழலில் இனப்பெருக்கம், வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதற்காகவே இந்த முயற்சி என்று கூறப்படுகிறது.

Steve Helber

கென்யாவைச் சேர்ந்த ஈவான்ஸ் செபெட், ஷரோன் லோகேடி ஜோடி கடுமையாகப் போராடி நியூயார்க் நகர மாரத்தான் போட்டியை வென்றிருக்கிறது.

கடந்த எட்டு வருடங்கள் வரலாறு காணாத வெப்பநிலையைச் சந்தித்திருப்பதாக ஐ.நா-வின் உலக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Peter Dejong