ஆப்கனில் பெண்கள் தேர்வெழுத அனுமதி| ஸ்பெயினை வீழ்த்திய மொராக்கோ - உலக செய்திகள் ரவுண்ட்அப்

சு.உ.சவ்பாக்யதா

பிரபல தொலைக்காட்சி பத்திரிகையாளர் அர்ஷத் ஷரிஃப் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையை மேற்பார்வையிட ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவைப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கிறது.

புதிய சட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்பெயின் தனது டிஜிட்டல் நோமட் விசாவை சர்வதேச தொலைதூர தொழிலாளர்களுக்கு ஜனவரி 2023-ல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மெக்ஸிகோவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

க்ரைம்

அல்பேனிய எதிர்க்கட்சித் தலைவர் சாலி பெரிஷா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மர்ம நபர் அவர் முகத்தில் குத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

இந்தோனேசிய அரசு திருமணத்தை மீறிய பாலுறவை ஓராண்டு வரை சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து தடைசெய்துள்ளது

அமெரிக்கப் பாடகியான லேடி காகா-வின் வளர்ப்பு நாயைச் சுட்ட நபருக்கு, 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி கால்இறுதிக்குள் மொராக்கோ நுழைந்திருக்கிறது.

முன்னாள் சீன அதிபர் ஜியாங் ஜெமினின் (ex-Chinese president Jiang Zemin) இழப்பிற்கு இந்தியாவின் சார்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி மர்மு வருத்தம் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான் பெண்கள் தற்போது உயர்நிலைப் பள்ளி தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவர் என்று தாலிபன் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Rahmat Gul