கோமா நிலைக்குச் சென்ற குத்துச்சண்டை வீரர் | அமெரிக்காவின் சூப்பர்சோனிக் சோதனை - உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

ரஷ்யாவுக்கு ஆயுதம் வழங்கியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்திருக்கிறது வடகொரியா.

Alexander Zemlianichenko

பாலியல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதையடுத்து, தனுஷ்கா குணதிலகாவை எல்லாவிதமான போட்டிகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கியிருக்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக அமெரிக்கா, தனது சூப்பர்சோனிக் வெடிகுண்டுகளைச் சோதனை செய்திருக்கிறது.

தேர்தலில் வெற்றிபெற்று இஸ்ரேலின் புதிய பிரதமராகியிருக்கும் பெஞ்சமின் நெடான்யாஹுவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

தான்சானியாவில் ஏற்பட்ட விமான விபத்தை ஆய்வுசெய்ய பிரான்ஸ் படை விரைந்திருக்கிறது. இந்த விபத்தில் 19 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

கென்யாவில் நிலவும் கடுமையான வறட்சியால் வன உயிரினங்கள் தொடர்ந்து பலியாகிவருகின்றன. இதுவரை 381 வரிக்குதிரைகள், 205 யானைகள், 51 எருமைகள், 12 ஒட்டகச்சிவிங்கிகள் உட்பட பல விலங்குகள் இறந்திருக்கின்றன.

Ben Curtis

ஐரோப்பாவில் இதுவரை 15,000 பேர் அதிக வெப்பநிலையால் இறந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Michael Probst

ஜிம்பாப்வே தனது முதல் நானோ சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தியிருக்கிறது. இது விவசாயத்துக்குப் பயன்தரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கஜகஸ்தான் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஒருவர் பங்கேற்ற குத்துசண்டைப் போட்டியில் நாக் அவுட் ஆனார். இதில் காயமுற்று மருத்துவ சிகிச்சையிலிருக்கும் அவர் கோமா நிலைக்குச் சென்றிருக்கிறார்.