அரச பொறுப்புகளை துறந்த நார்வே இளவரசி| 8 பில்லியனை தொடவிருக்கும் மக்கள்தொகை - உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

கத்தார் உலகக் கோப்பையின் தூதரான காலித் சல்மான் `தன்பாலின ஈர்ப்பு ஒரு மன நோய்' என்று கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

LGBT

உலக மக்கள்தொகை நவம்பர் மாதம் 8 பில்லியனை எட்டப்போவதாக ஐ.நா தெரிவித்திருக்கிறது. 1950-ல் 2.5 பில்லியனாக மக்கள்தொகை இருந்தது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த கிரிகோரி ஃபாஸ்டர் உலகின் காரமான பத்து மிளகாய்களை 33 வினாடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்தார்.

நார்வே இளவரசி மார்தா லூயிஸ் தனது அரச கடமைகளைத் துறந்து, தன் வருங்கால கணவருடன் வணிகத்தில் கவனம் செலுத்த முடிவுசெய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் பவர்பால் லாட்டரி ஜாக்பாட் 2.04 பில்லியன் பரிசுத் தொகையை எட்டியிருக்கிறது.

Keith Srakocic

ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் சாதகமாக அமைந்திருப்பதாக இந்திய வெளித்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

Maxim Shipenkov

2019-ல் நியூசிலாந்தின் மாஸ்க்-ல் கொடூரத் துப்பாக்கிச்சூடு நடத்திய ப்ரென்டன் தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறார்.

John Kirk-Anderson

டானியல் க்ரைக் நடித்திருக்கும் 'Glass Onion: A knives out mystery'-ன் ட்ரைலர் வெளியாகி அவரின் ரசிகர்கர்களிடையே் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.