ஜி-20-ல் முதன்முறையாகச் சந்திக்கும் பைடன் - ஜி ஜின்பிங் | உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

க.ஶ்ரீநிதி

400 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

Roman Chop

முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது கார்பன் உமிழ்வுகளின் தாக்கம் அதிகம் இருப்பதாகக் காலநிலை மாநாட்டில் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர்.

Peter Dejong

நவம்பர் 14-ம் தேதி ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திக்கவிருக்கின்றனர். ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து சீன அதிபரைச் சந்திப்பது இதுவே முதன்முறை.

Andy Wong

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தோனேசியாவில் நடக்கவிருக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என ரஷ்யத் தூதரகம் அறிவித்திருக்கிறது.

Aleksey Babushkin

பாரிஸ், லண்டனில் பணியாற்றும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் அதிக ஊதியம் வேண்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்திலிருந்து நேரடி விமானம் மூலம் கால்பந்து உலகக் கோப்பையைக் காண வரும் ரசிகர்களை அனுமதிக்க கத்தார் அரசு முடிவுசெய்திருக்கிறது.

Hassan Ammar

இந்தோனேசியாவில் 62 பேர் உயிரிழந்த விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறு மற்றும் விமானியின் தவறுகள் காரணம் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.

Tatan Syuflana

ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க் தன் ஊழியர்களுக்கு அனுப்பிய முதல் இமெயிலில் `தொலைவிலிருந்து வேலை பார்க்கும் வசதி இனி இருக்காது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Gregory Bull

ஆஸ்திரேலியாவின் மெடிபாங்கின் தரவுகளை வெளியிடத் தொடங்கிய ஹேக்கர்கள் 10 மில்லியன் டாலர் கேட்டிருக்கின்றனர்.

Rick Rycroft

நைஜீரியாவில் 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Sunday Alamba