`ஸ்லோவேனியாவின் முதல் பெண் அதிபர் முதல் பைடன்-ஜி ஜின்பிங் சந்திப்பு வரை'- உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

சு.உ.சவ்பாக்யதா

இஸ்தான்புல்லில் இருக்கும் இஸ்திக்லாலின் ஷாப்பிங் தெருவில் நடந்த கோர குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். ஜனாதிபதி ரெசெப் தையீப் எர்டோகன் இதை பயங்கரவாதத் தாக்குதல் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Khalil Hamra

எலான் மஸ்க்கின் தாயார் மேயே மஸ்க், ``என் மகனைத் தவறாகப் பேசுவதை நிறுத்துங்கள்" என்று எலான் மஸ்க்கை விமர்சிப்பவர்களை விமர்சித்திருக்கிறார்.

Evan Agostini

பூங்காக்களைத் தொடர்ந்து ஜிம்கள், பொதுக் குளியல் இடங்களுக்கும் பெண்கள் செல்ல தடைவிதித்தது ஆப்கானிஸ்தான் அரசு.

டெக்ஸாஸில் இரண்டாம் உலகப் போரின் நினைவாக நடந்த விமானக் கண்காட்சியில் இரண்டு ராணுவ விமானங்கள் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

இரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பான விவகாரத்தில், முதல் மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Francisco Seco

பிரான்ஸ் உடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக, இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தன்னுடைய நான்கு நாள் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

ஆரம்ப சுகாதார சேவைக்கு ஆதரவாக ஸ்பெயின் தலைநகர் போராட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Manu Fernandez

ஸ்லோவேனியாவின் முதல் பெண் அதிபராக மெலனியா ட்ரம்ப்பின் வழக்கறிஞர் நடாசா பிர்க் முசார் பதவியேற்றார்.

Darko Bandic

ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் அமெரிக்க அதிபரும், சீன அதிபரும் சந்தித்துக்கொண்டு கைகுலுக்கினர்.

Alex Brandon