`800 கோடியை எட்டிய மக்கள்தொகை முதல் ஜி-20 மாநாட்டில் பைடன் - மோடி சந்திப்பு வரை' - உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபருடன் இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு.

2023-ல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியிலிருந்து விலகியிருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ். தொடர்ச்சியாக சர்வதேசப் போட்டிகள் இருப்பதால், இந்த முடிவு என்று கூறப்படுகிறது.

James Elsby

இருப்பிட கண்காணிப்பு (Location tracking) வழக்கைத் தீர்ப்பதற்கு, கூகுள் 400 மில்லியன் டாலர் செலுத்தவிருப்பதாகத் தகவல் அறிக்கைகள் கூறுகின்றன.

Frank Franklin II

ட்விட்டர் ஊழியர் ஒருவர், எலான் மஸ்க்கின் செயல்பாடுகளைக் கண்டித்து ட்வீட் செய்ததையடுத்து, அவரை உடனே பதவிநீக்கம் செய்தார் எலான்.

எலான் மஸ்க்

கெர்சனின் மின்நிலையத்தை ரஷ்யா தாக்கி சிதைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறது உக்ரைன்.

பாலஸ்தீனிய -அமெரிக்கப் பத்திரிகையாளர் கொல்லப்பட்டது தொடர்பான அமெரிக்க விசாரணைக்கு ஒத்துழைக்கப்போவதில்லை என இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

ஜி-20 உச்சிமாநாட்டில் கனடா பிரதமர் - பிரிட்டன் பிரதமர் சந்திப்பு.

Sean Kilpatrick

ASEAN மாநாடு நடத்திய பிறகு, கம்போடிய பிரதமர் ஹுன் சென்னுக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Anupam Nath

மத்திய ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

Hiro Komae

மன்னரான பிறகு முதன்முறையாக, தன்னுடைய 74 -வது பிறந்தநாளைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடினார் சார்லஸ்.

Handout

உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியது. 1950-ம் ஆண்டு மக்கள்தொகை 200 கோடியாகவும், 1974-ம் ஆண்டு 400 கோடியாகவும் இருந்தது.

Rafiq Maqbool