`ஜி-20 தலைமையேற்ற இந்தியா முதல் அழிந்துவரும் அரிய வகை பவளப்பாறைகள் வரை!' - உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

போலி ட்விட்டர் கணக்குகள் பெருகுவதால், அதிகாரபூர்வ கணக்குகளுக்குப் பணம் வசூலிக்கும் முடிவைத் தள்ளிவைத்த எலான் மஸ்க், இந்த மாதம் 29-ம் தேதி புளூ டிக்கை ரீலாஞ்ச் செய்ய முடிவுசெய்திருக்கிறார்.

Gregory Bull

மெக்ஸிகோ நாட்டில் மீட்புப்பணிகளுக்கு உதவிய ஃப்ரீடா என்ற நாய் இறந்துவிட்டது. இதற்கு மக்கள் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலைப் பதிவுசெய்துவருகின்றனர்.

Rebecca Blackwell

வடிவமைப்பாளர் டாம் ஃபோர்டின் நிறுவனத்தை வாங்க முடிவு செய்திருக்கிறது விலையுயர்ந்த அழகுசாதன நிறுவனமான எஸ்டி லாடர்.

ஹைடியில் உள்ள உலக சுகாதார அமைப்பு அந்த நாட்டில் அதிகரித்துவரும் காலரா நோய்க்கு உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

Bilal Hussein

உலக மக்கள்தொகை 8 பில்லியனாக உயர்வு!

அடுத்த ஆண்டில் உலக மக்கள்தொகையில் முதலிடம் பிடிக்கும் இந்தியா!

Altaf Qadri

துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Emrah Gurel

எகிப்தில் அதிகரித்துவரும் எண்ணெய்க் கழிவுகளால் அழிந்துவரும் அரிய வகை பவளப்பாறைகள்.

Thomas Hartwell

இங்கிலாந்தில் பரவிவரும் பறவைக் காய்ச்சலால் கிளாஸ்கோ பூங்காவில் பன்னிரண்டு அன்னப்பறவைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி-20 உச்சிமாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ வழங்கினார்.

WILLY KURNIAWAN

உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் பணிபுரிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை சீனா பணியமர்த்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Andy Wong