நிலவுக்குப் பாய்ந்த நாசாவின் ஓரியன் | இந்தியா மெட்டாவுக்கு தலைமை ஏற்கும் சந்தியா - உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

உக்ரைன்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், போலந்து நாட்டில் ஏற்பட்ட தாக்குதலுக்கும் ரஷ்யாதான் காரணம் என அமெரிக்கா குற்றச்சாட்டு.

வெற்றிகரமாக நிலவை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் ஓரியன்.

NASA/Keegan Barber

பிரபல நடிகர் கெவின் ஸ்பேசி மீது லண்டனில் ஏழு பாலியல் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.

Frank Augstein

தடுப்பூசி போடாததால் விதிக்கப்பட்ட தடையை விலக்கி, ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் விளையாட நோவாக் ஜோகோவிச்சுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா.

Antonio Calanni

இணையதளத்தில் பதிவுகளை முறைப்படுத்த, நெறிமுறைகளை மறு ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டிருக்கிறது.

ட்விட்டருக்குப் புதிய தலைவரை நியமிக்க எலான் மஸ்க் திட்டம்.

ட்விட்டர்

ஸ்காட்லாந்தில் ஏவியன் பறவைக் காய்ச்சலால் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேலான பறவைகள் அழிப்பு.

ஜி20 மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், சீன அதிபர் ஜி ஜின்பிங் எதுவும் விமர்சிக்கவில்லை என சீன அமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

Sean Kilpatrick

இந்தியாவின் மெட்டா நிறுவன துணைத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.