ஆறுகளை மீட்க 4 அணைகளை இடிக்கும் அமெரிக்கா | ஏலம்போன 2,000 ஆண்டுகள் பழைமையான மோதிரம்- உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

மலேசியாவில் நாளை 15-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் யாசின், அன்வர் இப்ராஹிம் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

Vincent Thian

அரசுக்கு எதிராகப் போராடியதால் கைதுசெய்யப்பட்ட வசந்தா முதலிக்கே, கல்வேவா சிரிதம்மா ஆகிய இரு பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை விடுதலை செய்ய இலங்கைக்கு மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை.

Eranga Jayawardena

அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியர்கள் கூடுதல் சம்பளம், அதிகப் பணியாளர்களை நியமிக்கக் கோரி வேலைநிறுத்தம்.

Matt York

ஆறுகளை மீட்கும் முயற்சியில் அமெரிக்கா! நான்கு அணைகளை இடிக்கத் திட்டம்.

Nathan Howard

காசாவின் ஜபாலியா பகுதி குடியிருப்பில் தீ விபத்து. 21 பேர் உயிரிழப்பு.

Adel Hana

ரஷ்யப் படைகள் வெளியேறிய பின்னர் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும் உக்ரைனின் கெர்சான் பகுதி.

அதிகரிக்கும் வெப்பநிலையால் போஸ்னியாவில் அதிகரிக்கும் ஆலிவ் விளைச்சல்.

ஜப்பான்- சீன அதிபர்கள் சந்திப்பு. இரு நாட்டு பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை எனத் தகவல்.

2,000 ஆண்டுகள் பழைமையான மோதிரம் 36,000 பவுண்டுக்கு ஏலத்தில் விற்பனை.

உருகிவரும் பனிப்பாறைகளால் பாக்டீரியாக்கள் பெருகும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.