சு.உ.சவ்பாக்யதா
ஹைதி நாட்டில் காலரா தொற்று அதிகமாகிவரும் நிலையில், அங்கு காலரா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கார்பன் சந்தையில் பெரிய சீர்திருத்தத்துக்கான ஒப்பந்தத்தை அறிவித்தனர்.
பணவீக்கத்தை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ், அந்த நாட்டில் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் மீதான வரிக் குறைப்பை நீட்டித்திருக்கிறது.
கலிஃபோர்னியாவில், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மக்களுடன் அமைதியான முறையில் பழகி வசித்துவந்த மவுன்ட்டெயின் லயன் எனப்படும் பூனை, திடீரென ஆக்ரோஷமாக மாறி மக்களை அச்சுறுத்தியது. அதனால் அதைக் கருணைக் கொலை செய்துவிட்டனர்.
ஹாங்காங்கின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஷி ஷி (Xi Xi) தன்னுடைய 85 வயதில் உயிரிழந்தார்.
ஜி 20-ல் இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, மார்ச் 2023-ல் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவுக்கு வருகை தரவிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானின் சலாங் பகுதியில் எண்ணெய் டாங்க்கர் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.
ஊதிய உயர்வைக் கோரி, ரயில்வே தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட பலர் இங்கிலாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இரானில் தாரனே அலிதூஸ்டி (Taraneh Alidoosti) என்ற 38 வயது ஆஸ்கர் விருதுபெற்ற நடிகை, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்ததாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்று மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது.