பிரிட்டன் பிரதமர் ராஜினாமா | ஏலத்துக்கு வரும் 41 வருட கேக் - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

சு.உ.சவ்பாக்யதா

`உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்போவதில்லை’ என்று இஸ்ரேல் அமைச்சர் பென்னி கான்ஸ் அறிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் அயன் சூறாவளிக்குப் பிறகு, விப்ரியோ வல்னிஃபிகஸ் எனப்படும் சதை உண்ணும் பாக்டீரியாவின் தொற்று மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்துவருகிறது.

Amy Beth Bennett

மியான்மரிலுள்ள யாங்கூனில் இருக்கும் ஒரு சிறைச்சாலைக்கு அருகில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யாவுக்கு இரான் டிரோன் இயந்திரங்கள் வழங்கிவரும் தகவலை ஐரோப்பிய ஒன்றியம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

Roman Hrytsyna

பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

லிஸ் ட்ரஸ்

இந்த ஆண்டு கனடாவில் மூன்று லட்சம் பேருக்குக் குடியுரிமை வழங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

DARRYL DYCK

1981-ல் நடைபெற்ற சார்லஸ்-டயானா தம்பதியின் திருமண கேக் துண்டு 41 வருடங்களுக்குப் பிறகு தற்போது ஏலத்தில் விடப்படுகிறது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட கோர வெள்ளத்தில் 40 பில்லியன் டாலர் அளவுக்குச் சேதம் ஏற்பட்டிருப்பதாக உலக வங்கி கணக்கிட்டிருக்கிறது.

Zahid Hussain

வடகொரியா, புதன்கிழமையன்று 100-க்கும் மேற்பட்ட பீரங்கிக் குண்டுகளை தென்கொரியாவின் மீது ஏவியது.

Ahn Young-joon

26 வயதான ரோமினா பூர்மொக்தாரி ஸ்வீடனில் இளம் அமைச்சராக பதவியேற்று சாதனை படைத்தார்.

Christine Olsson/TT