தைவானுக்கு சீனா பரிசளித்த பாண்டா இறப்பு | உலக கால்பந்து போட்டி தொடக்கம் - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

க.ஶ்ரீநிதி

தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். ஏவுகணை தளத்தை ஆய்வு செய்ய செல்லும் புகைப்படங்கள் வெளியீடு.

朝鮮通信社

பாகிஸ்தானின் செஹ்வான் பகுதியில் தேங்கிய நீரில் மினிபேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் உயிரிழந்தனர்.

இன்னும் பத்து ஆண்டுகளில் நிலவில் மனிதர்கள் வசிக்க வாய்ப்புள்ளதாக நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி தகவல்.

Terry Renna

கானா நாட்டில் நிலவிவரும் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு அந்நாட்டின் நிதி அமைச்சர் கென்னத் ஒஃபோரி அட்டா, மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இன்று தொடங்குகிறது கால்பந்து உலகக்கோப்பை! கத்தாரில் 1.2 மில்லியன் மக்கள் குவிந்தனர்.

Jon Gambrell

எக்யுடோரியல் நியூ கினியாவின் தலைவராக மேலும் நீடிக்க ஒபியாங் திட்டமிட்டுள்ளார். இவர் அந்நாட்டின் தலைவராகக் கடந்த 43 ஆண்டுகளாக இருந்துவருகிறார்.

சீனா, தைவானுக்கு அன்பளிப்பாக அளித்த `டுஆன் டுஆன்' என்ற பாண்டா கரடி உயிரிழப்பு.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்-பின் ட்விட்டர் கணக்குக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.