க.ஶ்ரீநிதி
அமெரிக்காவில், வெல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இரண்டு மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் இறந்தனர். சமீபத்தில்தான், கலிஃபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
`உக்ரைன்-ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க, ஜெர்மனியின் ஒப்புதல் வேண்டும்' என போலந்து அரசு தெரிவித்திருக்கிறது.
காங்கோ நாட்டின் வடக்குப் பகுதியில் நடந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்பு (Islamic State Group) பொறுப்பேற்றிருக்கிறது.
பாரிஸ் ஃபேஷன் வீக்கில் அமெரிக்க ராப் பாடகி டோஜா கேட் 30,000 க்ரிஸ்டல்களால் அலங்கரித்துக்கொண்டு வந்தது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
பிரிட்டனின் பிரபல சைக்கிளிங் வீரரான மார்க் கேவன்டிஷ் (mark cavendish), அவர் மனைவியிடம் கத்தி முனையில் வாட்ச் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்தவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
ஸ்பாட்டிஃபை நிறுவனம் உலக முழுவதிலும் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருக்கிறது.
பாகிஸ்தானில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர். கராச்சி, லாஹோர் உள்ளிட்ட முக்கிய நகரங்களும் இருளில் மூழ்கின.
போரால் சேதமடைந்திருக்கும் சிரியாவின் அலெப்போ (Aleppo) நகரில் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில், இந்திய மாணவர்களுக்கான கூடுதல் இலவச விசா வழங்கப்படாது எனத் திட்டவட்டம்.
ஸ்வீடனில் நடந்த ஸ்டாக்ஹோம் போராட்டத்தில் குரான் எரிக்கப்பட்டதால், `நாட்டோவில் இணைய எங்கள் ஆதரவை எதிர்பார்க்கக் கூடாது' என ஸ்வீடனுக்கு துருக்கி அரசு பதில்.