பிரதமரானார் ரிஷி சுனக் |நைஜீரியா; முன்னாள் அமைச்சர் வீடு, கார் பறிமுதல் - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

க.ஶ்ரீநிதி

ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து நைஜீரிய நாட்டின் முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் டைசானி அலிசனின் வீடு மற்றும் கார்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு!

ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராவதற்கு மன்னர் சார்லஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ரிஷி சுனக் பிரதமராகப் பதவியேற்றார்.

Aaron Chown

அதிக வெப்பம் மற்றும் மழை மாறி மாறி தொடர்வதால் பாகிஸ்தானில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

K.M. Chaudary

டொனால்டு டிரம்ப்பின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. 

அமெரிக்காவின் பிரபல ராப் இசைக் கலைஞர் கேன் வெஸ்ட், யூதர்கள் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்வதால் அவருடனான வர்த்தக உறவை நீட்டிப்பது குறித்து அடிடாஸ் நிறுவனம் ஆலோசனை.

Ashley Landis

பண மோசடி புகார் காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டின் க்ரெடிட் சுசீ வங்கி 238 மில்லியன் யூரோவை செலுத்த பாரீஸ் நீதிமன்றம் உத்தரவு.

மெக்ஸிகோவில் கோலாகலமாக நடைபெற்றது கார்டினாஸ் திருவிழா!

Eduardo Verdugo

சோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு.

இலங்கையில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட தீபாவளி திருநாள்!

Eranga Jayawardena