சு.உ.சவ்பாக்யதா
பிஜி நாட்டின் பிரதமராக சிதிவேனி ரபுகா தற்போது பதவியேற்றுள்ளார்.
உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை நிகழ்ந்த தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் முதன்முறையாக லாரி மேக்னஸ் என்பவரை நெறிமுறை ஆலோசகராக நியமித்துள்ளார்
மியான்மர் நீதிமன்றம் ஆங் சான் சூகி மீதான 18 மாத விசாரணையின் இறுதித் தீர்ப்பை அடுத்த வாரம் வழங்கவுள்ளது.
இங்கிலாந்து அதன் பாதுகாப்பு செலவுகளை 1 பில்லியன் பவுண்டு அதிகரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாம்பியா ஜனாதிபதி ஹக்கைன்டா அந்நாட்டில் மரண தண்டனையை ரத்து செய்வதாக அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியத் தடைவிதித்துள்ளது தாலிபன் அரசு.
பாரிஸ் நகரில் 69 வயது நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்.
ஜோ பைடன் தற்போது இந்திய-அமெரிக்கரான ரிச்சர்ட் வர்மாவை வெளியுறவுத்துறையின் உயர்மட்ட தூதரக பதவிக்குப் பரிந்துரைத்தார்.
அமெரிக்க மரைன் கார்ப்ஸில் பணிபுரியும் சீக்கியர்களுக்குத் தாடியைப் பராமரிக்கவும் தலைப்பாகை அணியவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.