க.ஶ்ரீநிதி
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியில் பெண்கள் பல்கலைக்கழகங்கள் சென்று படிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழகங்கள் செல்வதைப் புறக்கணித்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் கிறிஸ்துமஸ் தினத்தன்று மக்கள் அவதி. நியூயார்க் நகரில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பனிப்புயலுக்கு இதுவரை 31 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
செர்பியாவில் அமோனியா ஏற்றிச்சென்ற தொடர்வண்டி தடம்புரண்டது. இதனால் விஷத்தன்மை வாய்ந்த அமோனியா வாயுவைச் சுவாசித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஹாரியட் ஹோட்டலில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாக வந்த செய்தியால், அமெரிக்க ஊழியர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அந்த நாட்டின் அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை.
சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவலால், அங்கு ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதனால், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டுமென அரசாங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீராங்கனை கேத்தி விட்வொர்த் 83 வயதில் காலமானார்.
நேபாலின் புதிய பிரதமரானார் முன்னாள் மாவோயிஸ்ட் தலைவர் புஷ்பா கமல் தஹால் 'ப்ரச்சந்தா'.
கலிஃபோர்னியாவின் முதல் சீக்கிய மேயரானார் மைக்கி ஹோத்தி.
தைவானை நோக்கி கடந்த 24 மணி நேரத்தில், 71 போர்விமானங்கள், 7 கப்பல்களை அனுப்பியிருக்கிறது சீனா.
கனடாவில் அதிக பனிப்பொழிவால் சாலைகளில் வாகனங்கள் செல்வது கடினமாகியிருக்கிறது. இதனால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழப்பு.