சு.உ.சவ்பாக்யதா
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனையைக் கட்டாயமாகியிருக்கிறது ஸ்பெயின்.
ஈரான் போராட்டங்களில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் சுமார் 100 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
டெக்ஸாஸின் 700-க்கும் மேற்பட்ட காட்டு வௌவால்கள் ஒரு வாரம் கடும் குளிர்கால வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கப்பட்டபின் ஹவுஸ்டன் நகரில் விடுவிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள்களை விநியோகித்த காரணங்களினால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருந்தாளுனர் துஷ்யந்த் படேல் கைதுசெய்யப்பட்டார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாகப் பச்சை குத்தியிருந்த பாலே நடனக் கலைஞர் செர்ஜி பொலுனின் (Sergei Polunin) நிகழ்ச்சியை இத்தாலி ரத்து செய்தது.
துருக்கியில் ஒரு உணவகத்தில் நடந்த சிலிண்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கத் தூதரான குயின் கேங்கை சீனா அந்நாட்டு வெளியுறவு அமைச்சராக நியமித்திருக்கிறது.
கடத்தல், பாலியல் கொடுமைத் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட ஆண்ட்ரூ டேட்டை 30 நாள் காவலில் வைக்க ரோமானிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மியான்மார் ராணுவ நீதிமன்றம் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது.அதோடு மொத்த சிறைத் தண்டனையையும் 33 ஆண்டுகளாக உயர்த்தியிருக்கிறது.
முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் (Benedict XVI) தன்னுடைய 95 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என வாடிகன் தெரிவித்திருக்கிறது.