சு.உ.சவ்பாக்யதா
உலகிலேயே முதன்முறையாக தேனீக்களுக்கான தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கிறது. இது தேனீக்களை ஃபுல்ப்ரூட் நோயிலிருந்து பாதுகாக்கும் எனக் கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவில் முழு குடியேற்ற விசா சேவையை அமெரிக்கா தொடங்கியிருக்கிறது.
கலிஃபோர்னியாவில் பலத்த புயல்காற்று வீசியதால், அங்கு பெரிய அளவில் பொருள்சேதம் ஏற்பட்டிருக்கிறது.
தென் கொரியாவில் கோவிட் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட சீனர் ஒருவர் காணாமல் போனதால் தற்போது தேடப்பட்டு வருகிறார்.
ஜனவரி 14 முதல் 17-ம் தேதி வரை தைவான்-அமெரிக்கா இடையே வணிகரீதியான பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி குறித்து கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோவுக்கு, அந்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. மேலும், தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுவதாக இரான் அறிவித்திருக்கிறது.
ஜோர்டனின் இளவரசர் ஹுசைனுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
முன்னாள் போப் 16-ம் பெனடிக்டின் உடல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இரானில் கைதுசெய்யப்பட்ட ஆஸ்கர் விருது பெற்ற நடிகை தாரனே அலிதூஸ்டி (Taraneh Alidoosti) தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.