உலகின் 190 வயதான ஆமை |பிரெஞ்சு அதிபரை சந்தித்த எலான் மஸ்க் | உலக செய்திகள் ரவுண்ட் அப்

க.ஶ்ரீநிதி

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்காவின் பாரம்பரியமிக்க நியூ ஓர்லான்ஸ் பகுதியைப் பார்வையிட்டார். இந்த பயணத்தில் எலான் மாஸ்க் மற்றும் இம்மானுவேல் மேக்ரான் சந்தித்துக் கொண்டனர்.

எக்குவடோர் நாட்டின் காலபகோஸ் தீவு பகுதியில் வசிக்கும் அரிய வகை பறவை இனத்தை, பறவை காய்ச்சலிலிருந்து பாதுகாக்க அரசுத் திட்டமிட்டிருக்கிறது.

உலகின் மிக வயதான ஆமை ஜோனத்தன் (Jonathan), 190 வயதை அடைந்திருக்கிறது.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே, தற்போது குணமடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

உகாண்டாவில் எபோலாவால் பாதிக்கப்பட்ட கடைசி நபரும் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பிரபல ராப் பாடகர் மிகோஸ் ராப்பர் டேக்ஆஃப் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாட்ரிக் சேவியர் கிளார்க் என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

1,000க்கும் மேற்பட்ட நியூயார்க் டைம்ஸ் தொழிற்சங்க ஊழியர்கள், ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி வெளிநடப்பு செய்யப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

இங்கிலாந்தின் ஹாரி மற்றும் மேகன் தம்பதியின் ஆவணப்படத்தை netflix நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஆறு பாகங்களை உள்ளடக்கிய இந்த படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகவிருக்கிறது.

இந்திய பெருங்கடலில் சீன கப்பல்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என இந்திய கடற்படை தளபதி தெரிவித்திருக்கிறார்.