கின்னஸ் சாதனை பூனை முதல் மலேசியாவின் பிரதமரான அன்வர் இப்ராஹிம் வரை... உலக செய்திகள் ரவுண்ட்அப்!

சு.உ.சவ்பாக்யதா

தெற்கு ரஷ்ய நகரமான கிரிம்ஸ்கில் உள்ள ஒரு ஷாப்பிங் சிட்டியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் இறந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பில் சேர்க்க நாடாளுமன்றத்தில் பிரான்ஸ் வாக்களிக்கவிருக்கிறது. அமெரிக்கா மற்றும் போலாந்தின் சட்ட மாற்றத்திற்குப் பிறகு இந்த முயற்சியை பிரான்ஸ் எடுத்திருக்கிறது.

பிரான்ஸ் நாடாளுமன்றம் | Christophe Ena

முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மீது பாலியல் குற்றம் சாட்டிய எழுத்தாளர் ஜீன் கேரோல், அவருக்கு எதிராக இரண்டாவது வழக்கையும் தாக்கல் செய்திருக்கிறார்.

Craig Ruttle

25 வருட போராட்டத்துக்குப் பிறகு மலேசியாவின் 10- வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றார்.

இங்கிலாந்தில் 26 வருடங்கள் 329 நாள்கள், அதாவது கிட்டத்தட்ட 120 மனித ஆண்டுகளுக்கு சமமான "ஃபாளாசி" என்ற பூனையை 'உலகின் வயதான பூனை 'என்று கின்னஸ் உலக நிறுவனம் அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் தற்போது CSL Behring's Hemgenix-hemophilia B மரபணு சிகிச்சைக்கு அனுமதி அளித்து, இதை உலகின் மிக விலை உயர்ந்த மருந்தாக உருவாக்கியிருக்கின்றனர். இந்த மருந்தின் விலை , இந்திய ரூபாயில் 28.58 கோடி மதிப்புடையது.

துருக்கியின் வட மேற்கு பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதில் 68 பேர் காயமடைந்தனர் எனக் கூறப்படுகிறது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவருடைய மனைவியான அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இங்கிலாந்தின் "ஆசிய பணக்காரர்கள் பட்டியல் 2022" -ல் ('Asian Rich List 2022') இடம்பிடித்திருக்கின்றனர்.

அமெரிக்காவில், வால்மார்ட் மேலாளர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட ஆறு பேரில், ஐந்து பேரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Billy Schuerman

இங்கிலாந்து அரசின் அனுமதியின்றி சுதந்திரம் குறித்த புதிய வாக்கெடுப்புகள் நடத்த ஸ்காட்லாந்துக்கு அதிகாரம் இல்லை என்று இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Jane Barlow