ரைம்ஸுக்கு பின் இவ்வளவு வரலாற்றுக் கதைகள் இருக்கா?! #ChildrensDay | #VisualStory

இ.நிவேதா

குழந்தைகள் உலகில் கள்ளங்கபடம் இல்லை. எந்தவொரு பிரபஞ்ச அழுத்தமும் சூழப்படாத வெள்ளந்தியான உலகம் அது. இன்னும் சொல்லப்போனால் பெரியவர்களின் சிக்கல்களுக்கு, குழந்தைகளிடத்தில் மிகவும் எளிமையாகப் பதில்கள் இருக்கும். 

pixabay

குழந்தைகளைக் கொண்டாடடும் விதமாக நவம்பர் 14-ம் தேதி தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

pixabay

குழந்தைகளுக்கு சிறுவயது முதல் கற்பிக்கப்படும் ரைம்ஸ்கள் உருவான விதம் மற்றும் அவற்றின் பொருள் குறித்து தெரிந்து கொள்வோம்.

pixabay

Rain rain go away... Come again another day : ராணி முதலாம் எலிசபெத்தின் ஆட்சியில் உருவானது இப்பாடல். 1588-ம் ஆண்டு, இங்கிலாந்து - ஸ்பெயின் நாட்டுக்கு பகை. இரு நாடுகளும் கப்பல் படை மூலமாக சண்டையிட்டுக் கொண்டனர்.

pixabay

தவிர, கடும் மழைச் சீற்றத்தால் இரண்டு கப்பல் படைகளும் சிதறடிக்கபட்டன. அதனால், மழையிடம் `வராதே’ என்று கோரிக்கை வைப்பது போல அமைந்திருந்தது இப்பாடல். முதலில் `Rain rain go to Spain’ என்றுதான் பாடல் எழுதப்பட்டது. பிறகே `Rain rain go away’ ஆனது.

pixabay

Baa, Baa, Black sheep, Have you any wool?: இங்கிலாந்தை ஆண்ட எட்வர்ட் அரசர், கம்பளி வணிகத்துக்குக் கடும் வரியை விதித்ததால், வரிவிதிப்பின் அடுக்குகளை இந்தப் பாடல் விவரித்துள்ளது. 

pixabay

கம்பளி விற்றுக் கிடைக்கும் பொருளின் ஒருபகுதி அரசனுக்கும், மற்றொரு பகுதி தேவாலயத்துக்கும் சென்றது. செம்மறி ஆடுகளை வளர்த்த மேய்ப்பனுக்கு ஒன்றுமே மிஞ்சவில்லை என்கிறது பாடல். 

pixabay

Ringa Ringa Roses, A Pocket full of posies: 1665-ம் ஆண்டு லண்டனை பிளேக் நோய் ஆட்கொண்டிருந்தது. இப்பாடலின் முதல் வரியான `Ringa Ringa Roses’ என்பது பிளேக் நோயால் தோலில் ஏற்பட்ட சிவப்பு வட்டங்களைக் குறிக்கிறது. 

Bubonic Plague

பாய்ஸஸ் (Posies) என்னும் ஒரு வகையான தாவர இலைகள்,   நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் என மக்கள் நம்பி, தங்கள் சட்டை பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டார்கள். A- tishoo! A- tishoo!  குளிரும், நடுக்கமும் பிளேக் நோயோடு சேர்ந்து வரும். அதன் அறிகுறியை குறிக்கும் விதமாக இந்த வரி உள்ளது.

pixabay

We all fall down என்பது நோயாளியின் இறப்பை குறிக்கிறது. அக்காலத்தில், போதுமான மருந்துகளும், நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாததால் கூட்டம் கூட்டமாய் மக்கள் பிளேக்குக்கு இரையானார்கள். இறப்புதான் ஒரே தீர்வாக இருந்திருக்கிறது என்பதைக் குறிக்கும் விதமாக, இறுதி வரி உள்ளது. 

pixabay

London Bridge is falling down, Falling down, falling down: தேம்ஸ் நதிக்குமேல் கட்டப்பட்ட லண்டன் பிரிட்ஜ், லண்டனின் பெருமைமிகு அடையாளம். அந்த பிரிட்ஜ் முதலில் கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்டது. பல இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டது. 

pixabay

`வைக்கிங்’ படையெடுப்பின்போது பாலம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாலத்தை எப்படிப் பாதுகாப்பது என்று ராணிக்கு ஆலோசனை வழங்க இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இனிய குழந்தைகள் தின நலவாழ்த்துகள்!

pixabay