`எங்கள் வீட்டில் எல்லா நாளும்...' வேஷ்டி சட்டையில் கலக்கிய CSK வீரர்கள்|Photo Story

பிரபாகரன் சண்முகநாதன் & எஸ்.கே.மௌரீஷ்

மும்பையில் நடந்த டெவன் கான்வே - கிம் இணையரின் திருமணத்துக்கு முன்பான பார்ட்டிக்கு சிஸ்கே வீரர்கள் வேஷ்டி சட்டையில் வந்திறங்கி விழாவை சிறப்பித்தனர்.

வலிமையான வாழ்த்துக்களை தெரிவித்த மொயீன் அலி.

ஒரே நாட்டை சேர்ந்த கிரிக்கெட்டர்கள். மிட்செல் சான்ட்னர் உடன் டெவன்.

வேஷ்டியில் இன்னும் மாஸாக இருக்கும் தல தோனியுடன் கான்வே.

CSK வின் இளஞ்சிங்கங்கள். நாராயணன் ஜெகதீசன், ருதுராஜ், ஹரிநிஷாந்த்

ஷிவம் துபே வாழ்வில் உயர வாழ்த்துக்களை சொல்லியிருப்பாரோ!

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, ஹேஷ்டேக்: CSK பட்டாளம்.

துஷார் தேஷ்பாண்டே மற்றும் ராஜ்வர்தன் - தோள் கொடுக்கும் தோழர்கள்!

சிரித்த முகத்தோடு பிரசாந்த் சோலங்கி

ஓப்பனிங் பார்ட்னர் ருதுராஜ், லைப் பார்ட்னருடன் இணைய இருக்கும் டெவனுக்கு வாழ்த்து சொன்னபோது...

CSK குடும்ப நிகழ்வுக்கு குடும்பத்தோடு வந்திறங்கிய ஷிவம் துபே.

மாப்பிள்ளை டெவன், மணப்பெண் கிம். திருமணத்துக்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் கலந்து கொண்ட சிஎஸ்கே வீரர்கள் விளையாட்டு களத்தை தாண்டியும் ஒன்றாக இருப்பது ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.